IND vs RSA : இந்திய அணி சொந்த மண்ணில் தெ.ஆ’வுக்கு எதிராக தொடரும் சோகமான சாதனை – விவரம் இதோ

IND vs SA
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ரிஷப் பண்ட் தலைமையில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது. அதில் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேஸிங் செய்து அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்த தென்னாப்பிரிக்கா 12 தொடர் வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை சுவைத்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அத்துடன் சொந்த மண்ணில் என்றுமே அவ்வளவு சுலபமாக தோற்று விடமாட்டோம் என்று காட்டிய இந்தியா கடைசி போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அளவுக்கு போராடி நல்ல நிலைமைக்கு வந்தது.

- Advertisement -

கடைசி போட்டி:
அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. அதில் கடந்த போட்டியில் காயமடைந்த காரணத்தால் விலகிய பவுமாக்கு பதில் தென் ஆப்பிரிக்கா கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஷவ் மஹராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆனால் அதுவரை குறுக்கே வராத மழை சரியாக 7 மணிக்கு வந்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. அதனால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி 7.50 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

நொறுக்கிய மழை:
அதன்பின் அறிவிக்கப்பட்டது போல் துவங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு 2 சிக்சரை பறக்க விட்ட இஷான் கிசான் 15 (7) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்த சில ஓவர்களில் ருதுராஜ் 10 (12) ரன்களில் அவுட்டானார். அதனால் 3.3 ஓவரில் 28/2 என மோசமான தொடக்கத்தைப் பெற்று இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் வந்த மழை வலுவாக வந்து கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் அடித்து நொறுக்கிய மழை எப்படியாவது நின்று விட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்த போதிலும் அதற்கு செவி சாய்க்காமல் மைதானத்தை முழுவதும் தண்ணீரால் நிரப்பியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இரவு 10.10 மணிவரை வெளுத்து வாங்கிய மழை ஓயாதுதுபோல் தெரிந்ததால் வேறு வழியின்றி அடிப்படை வழிமுறைப்படி இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த முக்கிய போட்டியை ஆவலுடன் பார்க்க வந்த ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இறுதியில் 4 போட்டிகளின் முடிவில் 2 அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று 2 – 2 என சமனில் இருந்ததால் அடிப்படை விதி முறைப்படி இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தூளாக்கிய மழை:
இதனால் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவை மீண்டும் கனவாகவே மாறியுள்ளது. ஆம் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா வரலாற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராகெல்லாம் அசால்டாக டி20 தொடரை வென்றுள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் இதுவரை ஒரு தொடரை கூட வென்றதில்லை.

- Advertisement -

1. கடந்த 2015இல் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொண்ட தோனி தலைமையிலான இந்தியா முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து நிலையில் 3-வது போட்டி இதேபோல் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த தென்னாப்பிரிக்கா தொடரை வென்றது.

2. அதன்ப்பின் 2019இல் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா வென்றாலும் 3-வது போட்டியில் தோல்வியடைந்தது. அதனால் அந்த தொடர் 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது போலவே இப்போதும் 2 – 2 என்ற கணக்கில் எவ்வளவோ போராடிய போதிலும் இந்தியாவால் தொடரை சமன் செய்ய மட்டுமே முடிந்ததே தவிர தென் ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை.

இதையும் படிங்க : தந்தையர் தினத்தில் குட்டி யுவியை அறிமுகப்படுத்திய யுவ்ராஜ் சிங் – ரசிகர்கள் கொஞ்சும் பெயர் இதோ

3. இதுபோக இந்த வருடம் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோற்ற இந்தியா அதன்பின் 3 – 0 என்ற கணக்கில் கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரிலும் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தற்போது 2 – 2 கணக்கில் சொந்த மண்ணில் டி20 தொடரை சமன் செய்ததுள்ள இந்தியா இந்த வருடம் அந்த அணிக்கு எதிராக ஒரு தொடரை கூட வெல்ல முடியாமல் தவிக்கிறது.

Advertisement