தந்தையர் தினத்தில் குட்டி யுவியை அறிமுகப்படுத்திய யுவ்ராஜ் சிங் – ரசிகர்கள் கொஞ்சும் பெயர் இதோ

Hazel-keech
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது இளம் வயதில் இருந்தே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பல வெற்றிகளைத் தேடி கொடுத்த மகத்தானவர். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் தனது 13 வயதில் மாநில அண்டர்-16 அளவில் விளையாடி 1997இல் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி முதல்தர கிரிக்கெட்டை விளையாட துவங்கினார். அப்படியே படிப்படியாக உயர்ந்து இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார்.

முகமது கைப் தலைமையில் முதல் முறையாக அந்த உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் அந்த வயதிலேயே தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார். அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வந்தது. அதில் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையில் ஒரு மிகச் சிறந்த இளம் வீரராக உருவெடுத்த இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே கிளன் மெக்ராத், பிரெட் லீ போன்றவர்களை அதிரடியாக எதிர்கொண்டு 84 (80) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

உலககோப்பை நாயகன்:
அதனால் இந்திய வெள்ளைப் அந்த அணியில் நிரந்தரமாக இடம் பிடித்த அவர் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்தார். அதிலும் 2007-ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்வதற்கு இவர் துருப்பு சீட்டாக செயல்பட்டார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்கவிட்டு 12 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 70 (30) ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.

அந்த தொடரில் அறிவிக்கப்படாத தொடர் நாயகனாக செயல்பட்ட அவர் 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் மீண்டும் எம்எஸ் தோனி தலைமையில் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்று இந்தியா 28 வருடங்கள் கழித்து கோப்பையை முத்தமிட கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதிலும் அந்த உலகக் கோப்பையில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக விளையாடிய அவர் 2012இல் அந்த நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட போது அதையும் தோற்கடித்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வந்தார்.

- Advertisement -

2வது இன்னிங்ஸ்:
அந்த வகையில் கிரிக்கெட்டையும் தாண்டி பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்க கூடிய ரோல் மாடலாக திகழும் யுவராஜ் சிங் கடைசியாக கடந்த 2017இல் இந்தியாவுக்காக விளையாடி 2019இல் ஓய்வு பெற்றார். முன்னதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேசல் கீச் எனம் மாடல் துறையைச் சேர்ந்த பெண்ணை காதலித்த இவர் 2015இல் அவருடன் நிச்சயதார்த்தம் செய்து 2016 இல் திருமணம் செய்து கொண்டார். கிரிக்கெட்டில் இருந்து பெற்ற ஓய்வுக்குப் பின் தனது மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்தி வரும் அவருக்கு கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று முதல் குழந்தை பிறந்தது.

அதை ஏற்கனவே அறிவித்திருந்த யுவராஜ் சிங் ஜூன் 19-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தனது மகனையும் அவருக்கு சூட்டியுள்ள பெயரையும் உலகிற்கு அறிவித்தார். “ஒரியன் கீச் சிங்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள யுவராஜ் சிங் தனது செல்ல மகனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறோம் ஒரியன் கீச் சிங். உனது தாய் மற்றும் தந்தை இந்த சின்ன குழந்தையை விரும்புகிறோம். உனது கண் சிமிட்டலும் ஒவ்வொரு புன்சிரிப்பும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட உனது பெயரைப் போலவே பிரகாசமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா கெத்து – ஒரு கலக்கல் பதிவு

அத்துடன் தனது மனைவியின் தந்தைக்கும் தனது தந்தை மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங் ஆகியோருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவரின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் “குட்டி யுவி” வந்துவிட்டதாக கூறி அவரின் பெயரை கொஞ்சி மகிழ்கிறார்கள்.

Advertisement