ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா கெத்து – ஒரு கலக்கல் பதிவு

Rohith
- Advertisement -

20-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் 5 நாட்கள் முடிந்தாலும் முடிவு கிடைக்காமல் டிராவிலேயே முடிவடைந்தது. அதனால் கிரிக்கெட்டை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு நாளில் முடிவைக் கொடுக்கும் வகையில் 60 ஓவர்கள் கொண்ட போட்டி உருவாக்கப்பட்டு அதுவும் பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த போட்டிகள் நிறைய எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு நாளில் முடிவு கொடுத்ததால் 90களில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட்டாக ஒருநாள் கிரிக்கெட் உருவெடுத்தது.

- Advertisement -

இருப்பினும் அதையும் ஒருநாள் உட்கார்ந்து பார்க்க முடியாத ரசிகர்களுக்காக 3 – 4 மணி நேரத்தில் முடிவை கொடுக்கக்கூடிய 20 ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பெரும்பாலான போட்டிகள் மிகுந்த பரபரப்புடன் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திரில்லர் தருணங்களை விருந்தாக படைத்ததால் 2005 முதல் இப்போதுவரை ரசிகர்களின் அபிமான போட்டிகளாக டி20 கிரிக்கெட் உருவெடுத்துள்ளது. இந்த நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை போன்ற ஐசிசி தொடர்கள் வந்தாலும் கூட இன்னும் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு மவுசு குறையவே இல்லை என்று கூறலாம்.

டாடி சதம்:
ஏனெனில் இப்போதும் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை தான் ரசிகர்கள் கிரிக்கெட்டின் பிரதான மிகப்பெரிய உலக கோப்பையாக பாவிக்கிறார்கள். அப்படி அன்றும் இன்றும் மவுசு குறையாத ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் சதமடிக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடுவார்கள். ஆனால் தரமான பவுலர்களுக்கு எதிராக அத்தனை போட்டிகளிலும் சதமடிக்க முடியாது என்ற சூழ்நிலையில் 20 – 30 ஓவர்கள் வரை நிலைத்து நின்று திறமையுடன் பேட்டிங் செய்தால் தான் சதத்தை தொட முடியும்.

Virat

அப்படி சதமடிக்கும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அன்றைய நாளில் தங்களது உச்சகட்ட இலக்கை எட்டி விடுவதால் திருப்தியடைந்து அடுத்த சில ஓவர்களில் அவுட்டாகி விடுவார்கள். ஆனால் ஒருசில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்தும் திருப்தியடையாமல் மேலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதிரணியை பந்தாடி ஆங்கிலத்தில் “டாடி 100” எனப்படும் 150 ரன்களை கடப்பார்கள்.

- Advertisement -

அதில் நங்கூரத்தை போல செட்டிலாகும் அரிதான இந்தியாவின் ரோகித் சர்மா போன்ற ஒருசில பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை சதத்தை அடித்து சரித்திரத்தையும் படைத்துள்ளார்கள். அந்த அவ்வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த டாப் 3 பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்:

gayle 1

4. கிறிஸ் கெயில்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர் டி20 போலவே ஒருநாள் கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்து மொத்தம் 301 போட்டிகளில் 10480 ரன்களை குதித்து அசத்தியுள்ளார். மொத்தம் 5 போட்டிகளில் சதமடித்து 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ள இவர் இந்த பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கிறார். குறிப்பாக 2015 உலக கோப்பையில் இரட்டை சதமடித்து 215 ரன்கள் குவித்ததை மறக்க முடியாது.

- Advertisement -

3. சச்சின் டெண்டுல்கர்: இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் 30000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அதிக ரன்கள் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ரன்களுக்கு விளாசி இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். குறிப்பாக இன்று யார் வேண்டுமானாலும் இரட்டை சதம் அடிக்கலாம் ஆனால் முதல் விதை போட்டது நான் என்ற வகையில் 2010இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டைச் சதமடித்து 200* ரன்கள் குவித்ததை மறக்கவே முடியாது.

- Advertisement -

2. டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரரான இவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக அந்த அணிக்கு பல மிகச்சிறந்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர். இதுவரை 131 ஒருநாள் போட்டிகளில் 5501 ரன்களை குவித்திருந்தாலும் 6 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ரன்களைப் பிடித்துள்ள இவர் இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

warner

பாகிஸ்தானை விட கெத்து:
ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த இவரின் திறமையை உணர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கொடுத்த வாய்ப்பை அப்படியே இறுக்கமாக பிடித்துக்கொண்ட இவர் 2010க்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டை ஆட்சி செய்து வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டை சதமடிப்பதே பலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் நிலையில் இவர் மட்டும் அசால்டாக 3 இரட்டை சதங்களை அடித்து யாராலும் உடைக்க முடியாத உலக சாதனை படைத்துள்ளார்.

அதுவும் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து உடைக்க முடியாத உலக சாதனை படைத்துள்ள இவர் 8 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக மேலும் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.

rohith

இது இந்தியாவின் அண்டை நாடு மற்றும் பரம எதிரியான பாகிஸ்தானை விட அதிகமாகும். ஆம் இதுவரை அந்த அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சேர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 7 முறை மட்டுமே 150க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்த பாகிஸ்தானை விட ரோகித் சர்மா கெத்தானவர் என்று இந்திய ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக் கொண்டால் அதில் எந்த தவறுமில்லை.

Advertisement