IPL 2023 : இதுக்கு தோனி எவ்ளவோ பரவால்ல, அவரிடம் கத்துக்கோங்க – மோசமான படைத்த ரோஹித் சர்மாவை விளாசும் ரசிகர்கள்

MI vs CSk
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் கடுமையாக போராடி 171/7 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அந்த அணிக்கு ரோகித் சர்மா 1 (10), இசான் கிசான் 10 (12), கேமரூன் கிரீன் 5 (4), சூரியகுமார் யாதவ் 15 (16) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 48/4 என திணறிய அந்த அணியை இளம் வீரர்கள் நேஹல் வதேரே 21 (13) ரன்களும் தனி ஒருவனாக போராடிய திலக் வர்மா 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு சுமாராக பந்து வீசிய மும்பையை அதிரடியாக எதிர்கொண்ட கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 73 (43) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (49) ரன்களும் எடுத்து 16.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
முன்னதாக இப்போட்டியில் மும்பை தோல்வியை சந்திப்பதற்கு அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக ஒரு காலத்தில் சரவெடியாக விளையாடி ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு பெயர் பெற்ற ரோகித் சர்மா ஏற்கனவே கடந்த 2022 சீசனில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்டது புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் அவர் இந்த முதல் போட்டியிலேயே 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன்னில் அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி ஆட்டமிழந்து சென்றது பல ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதை விட இந்த போட்டியில் வெறும் 1 ரன்னில் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் 50 முறை 1 – 5 ரன்களுக்குள் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 50*
2. தினேஷ் கார்த்திக் : 44
3. ராபின் உத்தப்பா : 41
4. சுரேஷ் ரெய்னா : 40

- Advertisement -

அத்துடன் இப்போட்டியில் வெறும் 10.00 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தது 10 பந்துகளை எதிர்கொண்ட ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய கேப்டன் என்ற தனது சொந்த சாதனையை உடைத்து மற்றுமொரு மோசமான வரலாறு சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 10.00 – பெங்களூருக்கு எதிராக, 2023*
2. ரோகித் சர்மா : 15.38 – டெல்லிக்கு எதிராக, 2022
3. ரோகித் சர்மா : 25.22 – கொல்கத்தாவுக்கு எதிராக, 2022

இருப்பினும் ஏற்கனவே நிறைய ரன்களையும் சாதனைகளையும் படைத்து மகத்தான வீரராக போற்றப்படும் அளவுக்கு அசத்தியுள்ள ரோகித் சர்மா இப்படி தடுமாறுவதற்கு அவருடைய சுமாரான ஃபிட்னஸ் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடமாகவே சுமாரான ஃபிட்னஸ் காரணத்தால் அடிக்கடி காயமடைந்து பேட்டிங்கில் தடுமாறும் அவர் இதர அணி வீரர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமென முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாக விமர்சித்தார்.

- Advertisement -

ஆனால் எதையுமே கேட்காமல் நேற்றைய போட்டியில் அவுட்டானதை பார்க்கும் ரசிகர்கள் பேசாமல் உங்களை வளர்த்த கேப்டன் தோனியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று ரோஹித் சர்மாவை விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : இங்கிலாந்தினர் ஆகாய சூரனாக போற்றும் ஜோப்ரா ஆர்ச்சரை அடித்து நொறுக்கி அமர வைத்த கிங் கோலி – மிரட்டல் சாதனை

ஏனெனில் இன்னும் ஒரு சில மாதங்களில் 42 வயதை தொட காத்திருக்கும் தோனி கடந்த ஒரு வருடமாக எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமலேயே நல்ல பிட்னெஸ் காரணத்தால் இந்த சீசனின் முதல் போட்டியில் 14* (7) ரன்கள் விளாசி அசத்தினார். இப்போதும் இளம் வீரரை போல் கட்டுமஸ்தான உடம்புடன் காட்சியளிப்பதால் ஃபிட்னஸில் ரோகித் சர்மாவுக்கு தோனி எவ்வளவோ பரவாயில்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement