இங்கிலாந்தினர் ஆகாய சூரனாக போற்றும் ஜோப்ரா ஆர்ச்சரை அடித்து நொறுக்கி அமர வைத்த கிங் கோலி – மிரட்டல் சாதனை

Virat Kohli vs Jofra Archer
- Advertisement -

கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களது முதல் கோப்பையை வெல்லும் லட்சிய பயணத்தை மீண்டும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. பெங்களூருவில் இருக்கும் புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடுமையாக போராடி 171/7 ரன்கள் சேர்த்தது.

ரோகித் சர்மா 1, இசான் கிசான் 10, கேமரூன் கிரீன் 4, சூரியகுமார் யாதவ் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் தனி ஒருவனாக போராடிய திலக் வர்மா 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 84* (46) ரன்களும் நேஹல் வதேரா 21 (13) ரன்களும் விளாசி ஓரளவு காப்பாற்றிய நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு ஆரம்பத்திலேயே சுமாராக பந்து வீசிய மும்பையை விராட் கோலியுடன் இணைந்து அடித்து நொறுக்கி 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 73 (43) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

தெறிக்க விட்ட கிங் கோலி:
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் கிளன் மேக்ஸ்வெல் 12* (3) ரன்களும் மறுபுறம் மும்பைக்கு சிம்ம சொப்பனமாக மாறி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (49) ரன்களும் விளாசிய விராட் கோலி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.2 ஓவரிலேயே 172/2 ரன்கள் எடுத்த பெங்களூரு அதிரடி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த மும்பைக்கு இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவது ஓரளவு பலமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தொடர்ந்து 140க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் முக்கிய நேரங்களில் அதிரடியான பவுன்சர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களின் மண்டையை பதம் பார்க்கும் திறமை கொண்ட அவர் தற்சமயத்தில் உலகில் சிறந்து விளங்கும் வேகபந்து வீச்சாளர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். அதனால் அவரை நவீன கிரிக்கெட்டின் ஆகாய சூர பவுலர் என்று மைக்கேல் வாகன் போன்ற இங்கிலாந்தினர் புகழ்பாடுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட அவர் கடந்த வருடம் காயமடைந்திருந்த போதும் வெளியே விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார் என்று தெரிந்தும் இலவச சம்பளம் கொடுத்து மும்பை நிர்வாகம் வாங்கியது.

- Advertisement -

அந்த நிலையில் இந்த சீசனில் முழுமையாக குணமடைந்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் நிச்சயமாக எதிரணிகளை தெறிக்க விட்டு பும்ராவின் இடத்தை நிரப்புவார் என்று மும்பை ரசிகர்களே சமூகவலைதளங்களில் கெத்தாக பேசினார்கள். ஆனால் இந்த போட்டியில் அதிரடியான வேகத்தில் பந்து வீசத் துவங்கிய அவரை ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு கணித்த விராட் கோலி ஒரு கட்டத்திற்கு பின் இறங்கி வந்து கவர் திசையில் பிளாட் சிக்சர் பறக்க விட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதே வேகத்தில் அதிரடி காட்டிய விராட் கோலிக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஒரு பந்தை வீசிய பின் ஜோப்ரா ஆர்ச்சர் அப்படியே களத்தில் உட்கார்ந்து “என்னைய்யா இப்படி அடிக்கிறாரு” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். அந்த வகையில் இந்த போட்டியில் மட்டும் அவருக்கு எதிராக விராட் கோலி 28 ரன்கள் விளாசினார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற அதிரடி சாதனையையும் விராட் கோலி படத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி (பெங்களூரு) : 28*ரன்கள், 2023*
2. கேஎல் ராகுல் (பஞ்சாப்) : 27 ரன்கள், 2018
3. ஜோஸ் பட்லர் (சிட்னி) : 26, 2018
4. ஆரோன் பின்ச் (சர்ரே) : 26, 2017

இதையும் படிங்க:172 ரன்களை 16.2 ஓவர்களில் நாங்கள் அடிக்க இதுவே காரணம். அதிரடிக்கான காரணத்தை சொன்ன – விராட் கோலி

அது போக மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக 64 பந்துகளை எதிர்கொண்டுள்ள விராட் கோலி ஒரு முறை கூட அவுட்டாகாமல் 85* ரன்களை 133 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வருவது இந்திய ரசிகர்களை பெருமை அடைய வைக்கிறது.

Advertisement