IND vs AUS : அவர் இருக்கும்போது சம்மந்தமின்றி உமேஷ் தேவையா, ரோஹித் – டிராவிட்டை வெளுக்கும் ரசிகர்கள்

Rohit Sharma IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் படு மோசமாக பந்து வீசிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று இரவு 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக 208/6 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 11, விராட் கோலி என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் எடுத்தனர்.

அவர்களை விட 5வது இடத்தில் களமிறங்கி ஆஸ்திரேலிய பவுலர்களை பட்டைய கிளப்பிய பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 71* (30) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நேதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுக்க 209 என்ற கடினமான இலக்கை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக 22 (13) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

இந்தியாவின் சொதப்பல்:
ஆனாலும் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்களை குவித்து ஆட்டமிழக்க அவருடன் பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 35 (24) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் கிளென் மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்கிலிஷ் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் கடைசியில் சவாலாக நின்ற மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 211/6 ரன்களை எடுத்து வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த தோல்வியால் தலை குனிந்து எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போட்டியில் புவனேஸ்வர் குமார் வழக்கம் போல சொதப்பிய நிலையில் காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் அவரை விட மோசமாக பந்து வீசினார். ஆனால் சமந்தமின்றி 3 வருடங்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட உமேஷ் யாதவ் அபார கம்பேக் கொடுக்கும் வகையில் பந்து வீசாமல் அந்த இருவருக்கும் போட்டியாக பந்து வீசியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

சம்மந்தமற்ற தேர்வு:
ஒரு காலத்தில் முதன்மை பவுலராக இருந்து நாளடைவில் ரன்களை வாரி வழங்கியதால் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா அணிக்காக அபாரமாக பந்துவீசி கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதனால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகம் தீபக் சஹர், ஆவேஷ் கான், நடராஜன், மோசின் கான் போன்ற தற்சமயத்தில் அணியில் இருக்கும் பவுலர்களை விட்டுவிட்டு அவரை தேர்வு செய்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்தது.

ஆனால் இங்கிலாந்தின் பிளாட்டான பிட்ச்சில் பந்து வீசி ஃபார்முக்கு திரும்பிய அவரின் முதல் 4 பந்துகளில் கேமரூன் க்ரீன் 4 தொடர்சியான பவுண்டரிகளை பறக்கவிட்டார். இருப்பினும் 2வது ஓவரில் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை அவுட் செய்த அவர் அதற்கு ஈடாக வெறும் 2 ஓவரில் 27 ரன்களை இதர பவுலர்களை காட்டிலும் 13.50 என்ற படுமோசமான எக்கனாமியில் பந்து வீசினார். அதனால் தவறான முடிவெடுத்து விட்டோம் என வருந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா முழுமையான 4 ஓவர்களை கொடுக்க முடியாத அளவுக்கு அவர் மோசமாக பந்து வீசினார்.

- Advertisement -

சஹர் இருக்கும்போது:
முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் இந்திய அணியில் ஷமி இல்லாத நிலையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் உள்ள தீபக் சஹர் காயத்திலிருந்து குணமடைந்து சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அசத்தலாக பந்துவீசி நல்ல பார்மில் இருக்கிறார். அதனால் உலகக்கோப்பையில் யாராவது காயமடைந்தால் விளையாடப் போகும் ரிசர்வ் வீரராக காத்திருக்கும் அவரை விட்டுவிட்டு சம்பந்தமின்றி உமேஷ் யாதவை தேர்வு செய்த ரோகித் சர்மா – டிராவிட்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

இத்தனைக்கும் ஆசிய கோப்பையில் ஆவேஷ் கானை தேர்வு செய்து அதில் அவர் சுமாராக சொதப்பிய போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் தீபக் சஹருக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு அதற்குள் என்னவாயிற்று என்று ரசிகர்கள் விளாசுகின்றனர்.

இதையும் படிங்க : IND vs AUS : 2 மோசமான சாதனைகளுடன் சத்தமின்றி வள்ளலாக செயல்படும் இந்திய பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள்

மேலும் நம்பர் ஒன் டி20 அணியாக உள்ள இந்தியாவில் தேவைக்கு அதிகமான தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் இப்படி தேவையற்ற மாற்றங்களை செய்து கொண்டிருந்தால் நிச்சயம் உலக கோப்பையை வெல்ல முடியாது என்றும் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement