சஷாங் சிங்கிற்காக பஞ்சாப் டீம் செஞ்ச வேலையை பாத்தீங்களா.. கொதித்த வர்ணனையாளர்கள்.. விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் கில் 89*, சாய் சுதர்சன் 33, ராகுல் திவாட்டியா 26* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, சிகந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 70/4 என தடுமாறிய பஞ்சாப்புக்கு மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய சசாங் சிங் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61* (29) ரன்களை 210.34 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அவருடன் இம்பேக்ட் வீரராக வந்த அசுடோஸ் சர்மா 31 (17) ரன்கள் அடித்ததால் 19.5 ஓவரில் பஞ்சாப் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு 61* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சஷாங் சிங் சந்தேகமின்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 32 வயதாகும் அவர் கடந்த வருடங்களில் மும்பை, ஹைதராபாத் போன்ற அணிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். சொல்லப்போனால் இம்முறையும் 19 வயதாகும் சஷாங் சிங் எனும் வீரருக்கு பதிலாக தவறுதலாக வாங்கப்பட்ட அவர் தற்போது பஞ்சாப்பின் வெற்றி நாயகனாக செயல்பட்டதால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் அந்தப் போட்டியில் 25 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட போது அவருக்கு ஃபெவிலியனிலிருந்த பஞ்சாப் அணியினர் யாருமே கைத்தட்டி பாராட்டு தெரிவிக்கவில்லை. குறிப்பாக அரஷ்தீப் சிங், கேப்டன் தவான் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட பஞ்சாப் பெவியனில் இருந்த அனைவரும் “இவர் எங்கே நமக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போகிறார்” என்ற எண்ணத்துடன் அரை சதமடித்த சஷாங் சிங்கிற்கு பாராட்டாமல் அப்படியே சிலை போல அமர்ந்திருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்திய அணியில் கில், பண்ட் செலக்ட்டாக பண்ணாதீங்க.. சைமன் டௌல் வெளிப்படை

அதனால் ஆச்சரியமடைந்த வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா. “உங்களுடைய அணிக்கு 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்துள்ளார். அவரை பாராட்ட மாட்டீர்களா” என்று பஞ்சாப் அணியை ஜியோ சினிமா சேனலின் நேரலையில் கடுமையாக விமர்சித்தார். மறுபுறம் முதல் முறையாக ஐபிஎல் அரை சதமடித்த சசாங் சிங் “நமக்கு கைதட்டுவார்களா” என்று பஞ்சாப் அணியை ஏக்கத்துடன் ஒரு நொடி பார்த்தார்.

ஆனால் அங்கே எந்த அசைவும் இல்லாததால் தொடர்ந்து அவர் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதனால் “சொந்த வீரரையே குறைத்து மதிப்பிட்டு பாராட்டி உத்வேகத்தை கொடுக்காததாலயே நீங்கள் இன்னும் முதல் கோப்பையை சொல்லவில்லை” என்று பஞ்சாப் அணியை ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement