2024 டி20 உ.கோ இந்திய அணியில் கில், பண்ட் செலக்ட் பண்ணாதீங்க.. சைமன் டௌல் வெளிப்படை

Simon Doull 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024  தொடரில் வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஒன்றரை வருடம் கழித்து விளையாடும் அவர் சென்னை மற்றும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து நல்ல ஃபார்முக்கு வந்துள்ளார். அதே போல சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்தப்படும் சுப்மன் கில்லும் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

டௌல் கருத்து:
இந்நிலையில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாடத் தயாராக இருக்கும் போது சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று சைமன் டௌல் தெரிவித்துள்ளார். அதே போல டி20 கிரிக்கெட்டில் இதுவரை தன்னை நிரூபிக்காத ரிஷப் பண்ட் நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் கேஎல் ராகுலை கீப்பராக தேர்வு செய்யலாம் என தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“உலகக் கோப்பை அணி 15 பேருக்கு பதிலாக 18 பேராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும். அதில் பஞ்சாப்புக்கு எதிராக 89 ரன்கள் அடித்தாலும் இன்னும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. அணியை தேர்வு செய்யும் போது நீங்கள் பேட்டிங்கில் ஒரு எக்ஸ்ட்ரா டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள். ஒரு டாப் ஆர்டர் இடத்திற்கு மட்டுமே நீங்கள் அறையை கொடுக்க முடியும்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய கேஎல் ராகுலை தேர்வு செய்வது உண்மையான போனஸ். எனவே கீப்பிங் செய்யக்கூடிய அவரை டாப் ஆர்டரில் பேக்-அப் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யலாம். ஆனால் சுப்மன் கில் விக்கெட் கீப்பிங் செய்வதில்லை. மேலும் ஜெய்ஸ்வால், ரோஹித், விராட் இருக்கும் போது அவரை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. என்னுடைய அணியில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட இன்னும் நிறைய செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: தோனியின் அந்த வழியை ஃபாலோ பண்ணி சிஎஸ்கே’வை வீழ்த்துவேன்.. ஹைதெராபாத் கேப்டன் கமின்ஸ் உறுதி

“கீப்பிங் செய்வதால் பலராலும் அறியப்படும் அவர் மிடில் ஆர்டரில் 5வது இடத்தில் விளையாட முடியும் என்பதை காண்பித்துள்ளார். ஆனால் இப்போதும் அவர் ஒரே பரிமாணத்தில் மட்டுமே அடிக்கக்கூடிய வீரராக உள்ளார். அவர் அற்புதமான டெஸ்ட் வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இன்னும் அவருடைய மாற்றத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பாக மைதானத்தின் ஒரு பகுதியில் மட்டுமே அவர் அடிக்கிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement