தோனியின் அந்த வழியை ஃபாலோ பண்ணி சிஎஸ்கே’வை வீழ்த்துவேன்.. ஹைதெராபாத் கேப்டன் கமின்ஸ் உறுதி

Pat Cummins CSk
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறும் 18வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இம்முறை மும்பைக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்த ஹைதராபாத் அணியில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

எனவே 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள அந்த அணி இப்போட்டியில் சென்னையை அதிரடியாக வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. மறுபுறம் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை கடந்த போட்டியில் டெல்லியிடம் தோற்றது. எனவே அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இப்போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் சென்னை களமிறங்குகிறது.

- Advertisement -

கமின்ஸ் உறுதி:
இந்நிலையில் வீரர்களிடம் ஒளிந்திருக்கும் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதில் தோனி சிறந்தவர் என ஹைதெராபாத் கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய வழியை பின்பற்றி தங்களுடைய வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இப்போட்டியில் சென்னையை தோற்கடிப்பேன் என்று உறுதியான நம்பிக்கை தெரிவிக்கும் கமின்ஸ் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே ஒரு கேப்டனாக என்னுடைய முதன்மை வேலை. அதற்காக நீங்கள் எதிரணியையும் கொஞ்சம் பார்க்கலாம். குறிப்பாக எதிரணி என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதற்காக எம்எஸ் தோனி போன்ற ஒருவரை மிஞ்சி விடலாம் என்று எண்ணத்துடன் எதையும் முயற்சி செய்யப் போவதில்லை”

- Advertisement -

“இருப்பினும் உங்களுடைய வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளியே கொண்டு வந்து நீங்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கலாம். அது எங்களுக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன். நீங்கள் எந்த அணியின் கேப்டனாக அல்லது வீரராக இருந்தாலும் எப்போதும் உங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்”

இதையும் படிங்க: டெல்லி தோல்விக்கு அப்றமும் தோனி இதை செய்யக்கூடாது.. ஹைதெராபாத் போட்டிக்கு முன் வாட்சன் கருத்து

“எனவே அவர்கள் மைதானத்தில் நிரம்பி இருப்பதை பார்ப்பது மிகவும் நல்லது. கடினமான டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எதையும் புதிதாக செய்யப் போவதில்லை. உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் முயற்சிக்கிறோம். எங்களுக்கு சில அற்புதமான வெற்றிகளையும் கடினமான தோல்விகளும் கிடைத்துள்ளன. ஆனால் எப்போதும் சிறந்த செயல்பாடுகளை கொடுத்து ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும்” என்று கூறினார்.

Advertisement