டெல்லி தோல்விக்கு அப்றமும் தோனி இதை செய்யக்கூடாது.. ஹைதெராபாத் போட்டிக்கு முன் வாட்சன் கருத்து

Shane Watson 2
- Advertisement -

மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அதில் அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்களை கொண்ட ஹைதராபாத் இதுவரை 3 போட்டிகளில் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

எனவே சென்னையை தங்களுடைய சொந்த ஊரில் அடித்து நொறுக்கி வெற்றி காணும் முனைப்புடன் ஹைதராபாத் களமிறங்க உள்ளது. மறுபுறம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. எனவே இப்போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி முன்னோக்கி நடைபெறும் முனைப்புடன் சென்னை விளையாட உள்ளது.

- Advertisement -

வாட்சன் கோரிக்கை:
முன்னதாக டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 192 ரன்களை சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ரகானே, டேரில் மிட்சேல், சிவம் துபே, ஜடேஜா, தோனி ஆகியோர் போராடியும் சென்னை பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத தோனி அப்போட்டியில் கடைசி நேரத்தில் வந்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் அடித்து நொறுக்கியது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இந்நிலையில் அப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி தற்போதுள்ள ஃபார்முக்கு முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே டெல்லி அணியிடம் சந்தித்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு ஹைதராபாத்துக்கு எதிராக தோனி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்று தெரிவிக்கும் வாட்சன் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் தவறாக சென்ற சில விஷயங்களில் சிஎஸ்கே பாடத்தை கற்றிருக்கும். ஏனெனில் அவர்களுக்கு அப்போட்டியில் பெரும்பாலான விஷயங்கள் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக அப்போட்டியில் கடைசி நேரத்தில் வந்த தோனி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: ரசிகர்கள் கண்மூடித்தனமா கொண்டாடுனாலும்.. தோனி அப்படி செஞ்சதை ஏத்துக்கவே முடியாது.. சைமன் டௌல் காட்டம்

“இருப்பினும் வாய்ப்பு இருக்கும் போதே அதை அவர் மேலே வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். ஏனெனில் நீண்ட காலம் கழித்து அவர் அப்படி பேட்டிங் செய்ததை நான் பார்த்தேன். எனவே சிஎஸ்கே அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றிருப்பார்கள். அதிலிருந்து தேவையான அம்சங்களை எடுத்துக்கொண்டு அடுத்த போட்டியில் அவர்கள் அதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அதை செய்வதாலேயே அவர்கள் இவ்வளவு வெற்றிகரமாக இருக்கின்றனர். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement