ரசிகர்கள் கண்மூடித்தனமா கொண்டாடுனாலும்.. தோனி அப்படி செஞ்சதை ஏத்துக்கவே முடியாது.. சைமன் டௌல் காட்டம்

Simon Doull
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் ஒரு தோல்வியும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற சென்னை 3வது போட்டியில் டெல்லியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால் அப்போட்டியில் தோல்வியை மறந்து தோனியின் ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.

ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற சூழ்நிலையில் இருக்கும் அவர் 42 வயதை கடந்து விட்டதால் இம்முறை 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார். அதனால் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி உறுதியான பின் கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37* (16) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

டௌல் விமர்சனம்:
குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என 4 பவுண்டரிகளை பறக்க விட்டு 20 ரன்களை குவித்த அவர் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். அதனால் 128 டெசிபல் சத்தத்தில் தோல்வியை பொருட்படுத்தாமல் தோனியின் ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் ரசிகர்கள் கொண்டாடினாலும் அப்போட்டியில் தோனியின் ஆட்டத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என முன்னாள் நியூசிலாந்து வீரர் சீமான் டௌல் விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியின் இன்னிங்ஸ் பற்றி நிறைய பாராட்டுக்கள் இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் நிறைய பந்துகளை அடிக்காமல் தடுத்து நிறுத்தினார்”

- Advertisement -

“அவர் ரன்கள் எடுக்காமல் நிறைய டாட் பந்துகளை எதிர்கொண்டார். அப்படி அவர் ரன் எடுக்காமல் தடுத்ததை பார்த்தது என்னால் நம்ப முடியவில்லை. எம்.எஸ். தோனி மகத்தானவர் என்பதை நான் அறிவேன். அவருடைய அந்த முடிவு மிகவும் சுமாரானது. அந்த ரன்கள் வேண்டாம் என்ற அவருடைய முடிவு மோசமானது. ஏனெனில் அப்போதும் நீங்கள் போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கிறீர்கள். அவர் நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் ஃபார்மை கண்டுபிடிக்கலாம் என்று சில கட்டத்தில் யோசித்திருக்கலாம்”

இதையும் படிங்க: ஐபிஎல் அழகே இதான்.. அந்த தப்பை பண்ணா 200 ரன்ஸ் அடிச்சாலும் ஜெயிக்க முடியாது.. கில் வருத்தம்

“ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த சூழ்நிலையில் என்ன நடந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் ரன்கள் எடுக்காத போது எனது பார்வையில் அது நன்றாக சரியாகத் தெரியவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய 4வது போட்டியில் ஹைதராபாத் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement