ஐபிஎல் அழகே இதான்.. அந்த தப்பை பண்ணா 200 ரன்ஸ் அடிச்சாலும் ஜெயிக்க முடியாது.. கில் வருத்தம்

Shubman Gill 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியை சந்தித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 89*, சாய் சுதர்சன் 33, ராகுல் திவாட்டியா 26* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய பஞ்சாப் அணியும் கேப்டன் ஷிகர் தவான் 1, ஜானி பேர்ஸ்டோ 22, பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரண் 5, சிக்கந்தர் ராசா 15, ஜிதேஷ் சர்மா 16 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ரன்களை விளாசி பஞ்சாப்பை காப்பாற்றினார்.

- Advertisement -

கில் வருத்தம்:
அவருடன் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக வந்து வெளுத்து வாங்கிய அசுடோஸ் சர்மா 31 (17) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் 200/7 ரன்கள் எடுத்த பஞ்சாப் போராடி வென்றது. அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் தங்களது பவுலர்கள் ஓரளவு நன்றாக செயல்பட்டதாக குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விஜய் சங்கர், ஓமர்சாய், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் கோட்டை விட்ட சில முக்கியமான கேட்சுகள் தங்களுடைய தோல்விக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சசாங், அசுடோஸ் போன்ற அறிமுகமில்லாத வீரர்கள் அசத்துவதே ஐபிஎல் தொடரின் அழகு என்று பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அனேகமாக சில கேட்ச்கள் கீழே சென்றது. நீங்கள் இப்படி கேட்சுகளை விட்டால் எப்போதும் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது”

- Advertisement -

“பவுலர்கள் தங்களது வேலையை ஓரளவு நன்றாக செய்தனர். இருப்பினும் பந்து நன்றாக பேட்டுக்கு வரும் போது இலக்கை கட்டுப்படுத்துவது கடினமாகும். இப்போட்டியில் நாங்கள் சற்று குறைவான ரன்கள் எடுத்தோம் என்று சொல்ல மாட்டேன். புதிய பந்து ஏதோ ஒன்றை செய்தது. 200 ரன்கள் வெற்றிக்கு போதுமானது. 15 ஓவர்கள் வரை போட்டியில் நாங்கள் இருந்தோம்”

இதையும் படிங்க: 11 பந்தில் யுவராஜ் சாதனையை உடைத்த திறமையானவர்.. குஜராத்தை விளாசிய யார் இந்த அசுடோஸ் சர்மா

“ஆனால் கேட்சை விட்டால் நீங்கள் எப்போதும் அழுத்தத்தை சந்திப்பீர்கள். கடந்த போட்டியில் நல்கண்டேவை எங்களுக்கு பந்து வீசிய விதத்தை வைத்து அவரை கடைசி ஓவரில் பயன்படுத்தியதில் எந்த முட்டாள்தனமும் இல்லை. இதுவரை பார்க்காத வீரர்கள் வந்து இது போன்ற இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பறிப்பதே ஐபிஎல் தொடரின் அழகாகும்” என்று கூறினார்.

Advertisement