- Advertisement -
ஐ.பி.எல்

IPL 2023 : என்னாங்க கேப்டன்ஷிப் இது? முக்கிய வீரரை யூஸ் பண்ணல – தடவல் இன்னிங்ஸ் விளையாடிய ராகுலை விளாசும் ரசிகர்கள்

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற 21வது லீக் போட்டியில் லக்னோவை அதன் சொந்த ஊரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 74 (56) ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட கேப்டன் ஷாம் கரண் 3 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு டைட் 0, ப்ரப்சிம்ரன் சிங் 4, சாம் கரண் 6 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான போதிலும் மேத்யூ சார்ட் அதிரடியாக 34 (22) ரன்களும் சிக்கந்தர் ராசா 57 (41) ரன்களும் எடுத்தனர். இறுதியில் கடைசி ஓவர் வரை சென்று அந்த போட்டியில் தமிழக வீரர் சாருக்கான் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23* (10) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்து 19.3 ஓவரிலேயே பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தடவல் இன்னிங்ஸ்:
மறுபுறம் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடியும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 – 25 ரன்கள் எடுக்க தவறிய லக்னோ தங்களுடைய 2வது தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இப்போட்டி நடைபெற்ற பிட்ச் சற்று மெதுவாக இருந்ததால் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் வழக்கம் போல மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அவருடன் அதிரடியாக விளையாட முயன்ற கெய்ல் மேயர்ஸ் 29 (23) ரன்களில் அவுட்டாக தீபக் ஹூடா 2 (3), க்ருனால் பாண்டியா 18 (17), நிக்கோலஸ் பூரான் 0 (1) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பஞ்சாப்பின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் அழுத்தத்தை உண்டாக்கினர்.

இருப்பினும் கூட அடுத்ததாக ஸ்டோனிஸ், படோனி, கெளதம் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் தயாராக இருந்தனர். ஆனால் 15 ஓவர்கள் நன்கு செட்டிலான கேஎல் ராகுல் கடைசி வரை அதிரடியை துவக்காமல் வழக்கம் போல 19வது ஓவரில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 74 (56) ரன்களை 132.14 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கே பிட்ச் கடினமாக இருந்தது, எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கவில்லை போன்றவை உண்மை என்றாலும் தரமும் அனுபவமும் கிளாஸ் நிறைந்த ராகுல் போன்ற வீரர் குறைந்தது 40 பந்துகளை எதிர்கொண்டு செட்டிலான பின்பாவது அதிரடியை துவக்கியிருந்தால் எளிதாக எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்களை எடுத்திருக்க முடியும்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் விக்கெட் விழுகிறது என்பதால் மெதுவாக விளையாடிய அவர் உண்மையில் எதிர்புறமிருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அவுட்டாக வைத்தார். மொத்தத்தில் கடந்த சில வருடங்களாகவே பெரிய இன்னிங்ஸ் விளையாடினாலும் அதை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் அவருடைய பேட்டிங் நேற்றும் அவரின் அணிக்கு எந்த பயனையும் கொடுக்கவில்லை. மாறாக ஐபிஎல் வரலாற்றில் 4000 ரன்களை வேகமாக குவித்த வீரர் என்ற சாதனையை கொடுத்து 17 கோடி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள உதவியுள்ளது.

அதை விட க்ருனால் பாண்டியாவை காட்டிலும் ரவி பிஷ்னோய் தான் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் 8 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பி பட்டியலில் 5வது இடத்தில் இருந்து வருவதை அனைவரும் அறிவோம். அப்படி விக்கெட் டேக்கிங் பவுலரான அவரை 15வது ஓவரில் தான் முதல் முறையாக ராகுல் பந்து வீச அழைத்தார். அந்த டெத் ஓவர்களிலும் அபாரமாக செயல்பட்ட பிஷ்னோய் 2.3 ஓவரில் 18 ரன்களை மட்டும் கொடுத்து சிகந்தர் ராசா, சாம் கரண் ஆகியோரின் 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

இதையும் படிங்க:LSG vs PBKS : அறிமுக ஐ.பி.எல் போட்டியிலேயே அசத்திய யுத்விர் சிங். யார் இவர்? – சுவாரசிய தகவல் இதோ

ஒருவேளை அவர் மட்டும் முன்கூட்டியே பந்து வீசியிருந்தால் இன்னும் சில விக்கெட்டுகளை எடுத்து வெற்றி கொடுத்திருப்பார். ஆனால் பிரீமியர் ஸ்பின்னராக இருக்கும் அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் கொடுக்காமல் வெற்றி பறிபோன பின் கடைசி ஓவரை வழங்கிய ராகுல் கேப்டன்ஷிப் பல ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -