LSG vs PBKS : அறிமுக ஐ.பி.எல் போட்டியிலேயே அசத்திய யுத்விர் சிங். யார் இவர்? – சுவாரசிய தகவல் இதோ

Yudhvir-Singh
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய வேளையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

Yudhvir Singh 2

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த ஐபிஎல் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் யுத்விர் சிங் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே தனது முதல் ஓவரில் அதர்வா டைட் என்பவரை வீழ்த்திய யுத்விர் சிங் தனது அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கை கிளீன் போல்ட்டாக்கி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். நேற்றைய போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் வேகத்தில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் யுத்விர் சிங் யார்? என்ற தேடல் தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவலைத்தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் தான் இந்த யுத்விர் சிங். ஆரம்பத்தில் இவர் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகினார்.

Yudhvir Singh 1

அதன் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு மாற்றிக் கொண்ட அவர் தற்போது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அந்த அணிக்காக 4 முதல்தர போட்டிகள், 8 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். அவரது அசத்தலான பந்துவீச்சு உள்ளூர் கிரிக்கெட் நிபுணர்களின் மத்தியில் வரவேற்பினை பெற அவரது பேச்சு அனைவரது மத்தியிலும் எழ துவங்கியது. அதோடு அவரது பெயரும் மெல்ல மெல்ல அனைவருக்கும் வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை அணி அவரின் திறமையை அறிந்து அவரை மும்பைக்கு அழைத்து வந்து பிரத்தியேகமாக பயிற்சி அளித்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி அளித்த இந்த பயிற்சியிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக மும்பை அணியின் நெட் பவுலராக பயணித்து வந்த வேளையில் 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை மும்பை அணி 50 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலையில் ஏலம் எடுத்திருந்தது. ஆனாலும் அவருக்கு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பினை மும்பை அணி வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணியில் இருந்து விடுக்கப்பட்ட அவரை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது.

இதையும் படிங்க : LSG vs PBKS : பேட்டிங்கில் நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம். தோல்விக்கு பிறகு – கே.எல் ராகுல் வெளிப்படை

இந்நிலையில்தான் இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 21-வது போட்டியின் போது லக்னோ அணி அவருக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக அறிமுகமாகும் வாய்ப்பினை வழங்கியது. அப்படி தனக்கு கிடைத்த அறிமுக வாய்ப்பை அசத்தலாக பயன்படுத்திய அவர் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவரது ஸ்டைலும், திடகாத்திரமான தோற்றமும் நிச்சயம் அவரை வெகு சிறப்பான வீரராக விரைவில் மாற்றும் என்றும் இந்திய அணிக்காக கூட அவருக்கு விளையாட வாய்ப்புள்ளதாக பலரும் கருதுகின்றனர்.

Advertisement