LSG vs PBKS : பேட்டிங்கில் நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம். தோல்விக்கு பிறகு – கே.எல் ராகுல் வெளிப்படை

KL Rahul LSG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

LSG vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 74 ரன்கள் குவித்தார். பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 161 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :

இந்த ஆட்டத்தில் நாங்கள் 10 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இரண்டாவது பாதியில் டியூ வந்ததால் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மன்களுக்கு மைதானம் சாதகமாக மாறிவிட்டது. அதேபோன்று பந்துவீச்சின் போது நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் புது டிராக்டில் விளையாடும்போது நிச்சயம் தேவையான அளவு ரன்களை குவித்திருக்க வேண்டும். எங்கள் அணியால் 180 முதல் 190 ரன்கள் வரை குவிக்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு பலம் வாய்ந்த பிளேயர்கள் எங்களது அணியில் உள்ளனர். குறிப்பாக பூரான், ஸ்டோய்னிஸ் மற்றும் கையில் மேயர்ஸ் போன்ற அதிரடியான வீரர்கள் இருக்கின்றனர். எங்கள் அணியில் 7 முதல் 8 பேட்டர்கள் இருந்தும் பெரிய ரன்களுக்கு செல்ல முடியாதது வருத்தம்.

இதையும் படிங்க : IPL 2023 : இப்போதுள்ள பசங்க வேற மாதிரி, அந்த பையனோட சாதனைய என்னால கூட அடிக்க முடியாது – இளம் வீரருக்கு விராட் கோலி பாராட்டு

அனைவருமே பவுண்டரியை அடிக்கும் திறமை உள்ள வீரர்கள் ஆனால் இன்றைய போட்டியில் வேறு சூழ்நிலை அமைந்துவிட்டது. நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து சில மாற்றங்களை செய்து அடுத்த முறை இன்னும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என கே.எல் ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement