IPL 2023 : இப்போதுள்ள பசங்க வேற மாதிரி, அந்த பையனோட சாதனைய என்னால கூட அடிக்க முடியாது – இளம் வீரருக்கு விராட் கோலி பாராட்டு

Kohli-2
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 20 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி தான் ரசிகர்களுக்கு உச்சகட்ட த்ரில்லர் விருந்தை படைத்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் 204/4 ரன்கள் குவித்தது.

Rinku SIngh

- Advertisement -

அதை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானாலும் நீண்ட நாட்கள் கழித்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தனர். ஆனால் அப்போது உள்ளே புகுந்த ரசித் கான் 17வது ஓவரில் ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட 3 வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் விக்கெட்களை பதிவு செய்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் கிட்டத்தட்ட பறிபோன கொல்கத்தாவின் வெற்றியை மனம் தளராமல் போராடிய ரிங்கு சிங் ஜோஸ்வா லிட்டில் வீசிய 19ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை விளாசி வெற்றியை நெருங்கினார்.

விராட் கோலி வியப்பு:
அதை விட யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட போது யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த 5 சிக்ஸ்ர்களை பறக்க விட்ட ரிங்கு சிங் 48* (18) ரன்கள் விளாசி நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஏனெனில் உலக டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் யாருமே கடைசி ஓவரில் அடுத்தடுத்த 5 சிக்ஸர்களை அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்ததில்லை. குறிப்பாக கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக எடுத்த அவர் கிட்டத்தட்ட 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடியதைப் போலவே அபாரமாக செயல்பட்டு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Rinku-Singh

அதற்காக இந்த இன்னிங்ஸை உலக கோப்பை போட்டியுடன் ஒப்பிட முடியாது என்றாலும் அந்தப் போட்டியிலும் கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட போது வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் கடைசி 5 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு தம்மால் கூட வெற்றி கொடுக்க முடியாது என்று ரிங்கு சிங்கை பாராட்டும் விராட் கோலி இப்போது இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளில் நம்ப முடியாத வகையில் செயல்படுவதாக வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுடன் அவர் உரையாடியது பின்வருமாறு. “இப்போதைய இளம் வீரர்கள் இவ்வாறு செயல்படுவதை பார்ப்பது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் இந்த இளம் வீரர்கள் செய்வதை என்னால் செய்ய முடியும் என்று எப்போதும் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. குறிப்பாக மற்றொரு இரவில் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்தது வியப்பானது. இதற்கு முன் அவ்வாறு வரலாற்றில் நடந்ததில்லை”

kohli

இதையும் படிங்க:LSG vs PBKS : பரபரப்பான போட்டியில் அதிரடி பினிஷிங் கொடுத்த தமிழகத்தின் ஷாருக்கான், கேப்டனால் லக்னோ தோற்றதா?

“அன்று அவர் 5 அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதாவது இது எந்த வகையான லெவல்? எனவே கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறையை நோக்கிய நகர்வு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார். ரிங்கு சிங் போலவே சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் கார்த்திக் தியாகி, ராகுல் திவாடியா போன்ற இளம் இந்திய வீரர்கள் நம்ப முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement