கோபமான டு பிளேஸிஸ்.. ஜேஎஸ்கே வெற்றியை தடுக்க பிளான் போட்ட பொல்லார்டை.. விளாசும் ரசிகர்கள்

Faf Du Plessis and Pollard
- Advertisement -

ஐபிஎல் போல தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 29ஆம் தேதி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளான மும்பை நிர்வகிக்கும் எம்ஐ கேப் டவுன் மற்றும் சென்னை நிர்வகிக்கும் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

மழையால் இரு அணிகளுக்கும் தலா 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ கேப் டவுன் 8 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80/3 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு வேன் டெர் டுஷன் 16, ரிக்கி ரிக்கல்டன் 23, லியம் லிவிங்ஸ்டன் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் கொதிப்பு:
ஆனால் கடைசி நேரத்தில் சரவெடியாக விளையாடிய கேப்டன் கைரன் பொல்லார்ட் 10 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 33* ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுக்க ஜேஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 81 ரன்களை துரத்திய ஜேஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் டு பிளாய் ஆகியோர் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வேகமாக ரன்களை சேர்த்தனர்.

குறிப்பாக மீண்டும் மழை வருவதற்குள் எப்படியாவது வேகமாக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி முதல் 3 ஓவரிலேயே 57/0 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியது. அப்போது இப்படியே விட்டால் ஜேஎஸ்கே எளிதாக வென்று விடும் என்று கருதிய எம்ஐ கேப்டன் பொல்லார்ட் 4வது ஓவரை வீச வந்த காகிஸோ ரபாடாவிடம் வேண்டுமென்றே ஓடிச் சென்று கடைசி நேரத்தில் பந்தை வீசாமல் தாமதப்படுத்துங்கள் என்று சொன்னார்.

- Advertisement -

அதாவது ஏற்கனவே மழையால் தாமதமான அந்த போட்டியில் அடிப்படை விதிமுறை விதிமுறைப்படி ஜேஎஸ்கே 5 ஓவர்களை தாண்டாமல் போனால் ரத்து செய்யப்படும். அதை மனதில் வைத்த பொல்லார்ட் வேண்டுமென்றே தாமதம் செய்யலாம் என்று சொன்னதை ரபாடாவும் செய்தார். அதனால் கோபமடைந்த டு பிளேஸிஸ் எதிரணியினர் வேண்டுமென்றே போட்டியை தாமதப்படுத்துவதாக நடுவரிடம் புகார் செய்தார்.

இதையும் படிங்க: ஜடேஜா வேற இல்ல.. 3 ஸ்பின்னர்கள் போதாது.. 2வது டெஸ்டில் அவரை களமிறக்குங்க.. கும்ப்ளே ஆலோசனை

அதனால் நடுவரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து போட்டி நடைபெற்றது. அப்போது மீண்டும் வெறித்தனமாக விளையாடிய டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50* (20), டு பிளாய் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 41* (14) ரன்கள் விளாசி 5.4 ஓவரிலேயே ஜேஎஸ்கே 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். அந்த வெற்றியால் ஜேஎஸ்கே போனஸ் புள்ளியையும் பெற்ற நிலையில் பொல்லார்ட் போட்ட கேவலமான திட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement