ஜடேஜா வேற இல்ல.. 3 ஸ்பின்னர்கள் போதாது.. 2வது டெஸ்டில் அவரை களமிறக்குங்க.. கும்ப்ளே ஆலோசனை

Anil Kumble 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பரிதாபத் தோல்வியை சந்தித்தது. ஏனெனில் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலையாக பெற்றது. ஆனால் 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் அடித்ததால் தப்பிய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த இந்தியா டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்த சுழலில் சிக்கி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாப தோல்வியை சந்தித்தது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்தால் 2வது போட்டியில் விளையாட மாட்டார்கள் என்பது பின்னடைவை ஏற்படுத்த உள்ளது.

- Advertisement -

4 ஸ்பின்னர்கள் திட்டம்:
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2வது போட்டியில் இந்தியா வெல்வதற்கு 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவதை பற்றி யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியுள்ள நிலையில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“உங்களுக்கு 4வது ஸ்பின்னர் தேவையா என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் ஒருவேளை இந்தியா 1 வேகப்பந்து வீச்சாளர் மட்டும் போதும் என்று நினைத்தால் பின்னர் குல்தீப் யாதவ் உதவி செய்வார். அவரிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கிறது. மறுபடியும் ஹைதராபாத்தில் வென்ற இங்கிலாந்து அதே திட்டத்துடன் இந்த போட்டியில் விளையாட இங்கிலாந்து வரும்”

- Advertisement -

“விசாகப்பட்டினம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கலாம். இருப்பினும் ஹைதராபாத்தை விட அங்கே சற்று வேகம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எந்த மைதானத்திலும் சிறப்பாக விளையாட நீங்கள் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியா சுழலுக்கு எதிராக விளையாடுவதில் தங்களுடைய அணுகுமுறையை வலுவாக அமைக்க வேண்டும்”

இதையும் படிங்க: அணிக்கு தேவைப்பட்டா அவரும் டீமுக்குள்ள வந்துடுவாரு.. முகமது ஷமிக்கான மாற்றுவீரரை – அறிவித்த பி.சி.சி.ஐ

“ஏனெனில் நம்முடைய பேட்ஸ்மேன்களில் சிலர் நேர்மறையாக விளையாடவில்லை. அவர்களுடைய புட் வொர்க் கூட எதிர்பார்த்த அளவு முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக இல்லை” என்று கூறினார். முன்னதாக ஹைதராபாத் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 4 ஸ்பின்னர்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே களமிறங்கி வெற்றி கண்டது. எனவே இந்தியாவும் 2வது போட்டியில் அதே போன்ற யுக்தியை கையாள்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement