அணிக்கு தேவைப்பட்டா அவரும் டீமுக்குள்ள வந்துடுவாரு.. முகமது ஷமிக்கான மாற்றுவீரரை – அறிவித்த பி.சி.சி.ஐ

Shami
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் பின்தங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது முதல் டெஸ்ட் போட்டியின் போது விளையாடிய ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் முகமது ஷமி மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடாத சூழலில் இவர்களது விலகலும் சேர்ந்து இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தற்போதைய ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள்.

இதனால் இந்திய அணி இந்த சூழலை எல்லாம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்திய அணியில் முகமது சிராஜ், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் மட்டுமே இந்த இங்கிலாந்து தொடருக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் முகமது ஷமிக்கு பதிலான மாற்று வீரர் யார்? என்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரராக ஆவேஷ் கான் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி போட்டிகளில் அவர் விளையாடி வந்தாலும் இந்திய அணிக்கு தேவைப்பட்டால் உடனடியாக அவர் முதன்மை இந்திய அணியுடன் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அது மட்டும் நடந்தா இங்கிலாந்து 5 – 0ன்னு இந்தியாவை தோற்கடிக்கும்.. மான்டி பனேசர் அதிரடி பேட்டி

ஏற்கனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகேஷ் குமார் அணியில் இருக்கும் வேளையில் தற்போது கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கான் மாற்றுவீரராக ஷமியின் இடத்தில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆவேஷ் கான் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement