அது மட்டும் நடந்தா இங்கிலாந்து 5 – 0ன்னு இந்தியாவை தோற்கடிக்கும்.. மான்டி பனேசர் அதிரடி பேட்டி

Monty Panesar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அந்த போட்டியில் முதல் 3 நாட்கள் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் குவித்த உதவியுடன் தப்பிய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் இந்தியாவை சேசிங் செய்யவிடாமல் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்துக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

5 – 0ன்னு வீழ்த்துவோம்:
அந்த வகையில் அதிரடியாக விளையாடி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்ப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து தற்போது அதை செயலிலும் செய்து காட்டி 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது.

இந்நிலையில் முதல் போட்டியில் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ஓலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் இதே போல எஞ்சிய 4 போட்டிகளிலும் செயல்பட்டால் 5 – 0 என்ற கணக்கில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் மான்டி பனேசர் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை ஓலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி இதே போல தொடர்ந்து விளையாடினால் 5 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வெல்லும். அது போப் மற்றும் ஹார்ட்லி ஆகியோர் இதே போல விளையாடினால் மட்டுமே நடக்கும். முதல் போட்டியில் பெற்றது மிகப்பெரிய வெற்றி. யாருமே அது சாத்தியமாகும் என்று நினைக்கவில்லை”

இதையும் படிங்க: கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்த 2 பேர்ல ஒருத்தர் அறிமுகமாகப்போவது உறுதி? – போட்டியில் இருக்கும் 2 வீரர்கள்

“குறிப்பாக 190 ரன்கள் பின்தங்கிய பின் இங்கிலாந்து தோற்கும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் ஓலி போப் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். அதனால் ரோகித் சர்மா என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றார். அந்த வெற்றி வெளிநாடுகளில் இங்கிலாந்து பதிவு செய்த மகத்தான வெற்றிகளில் ஒன்றாகும். இது நாங்கள் உலகக் கோப்பையை வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement