கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்த 2 பேர்ல ஒருத்தர் அறிமுகமாகப்போவது உறுதி? – போட்டியில் இருக்கும் 2 வீரர்கள்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி ஜனவரி 28-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருந்த கே.எல் ராகுல் 86 ரன்கள் குவித்திருந்த வேளையில் இரண்டாவது இன்னிங்சிலும் 22 ரன்கள் குவித்திருந்தார். விராட் கோலி இல்லாத நேரத்தில் அவரது இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் கே.எல் ராகுல் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது கே.எல் ராகுலின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விராட் கோலி இல்லாத நேரத்தில் அனுபவ வீரராக கே.எல் ராகுல் மட்டுமே இருந்தார். இவ்வேளையில் அவரும் அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் தற்போது அவரது இந்த விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த இந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கே.எல் ராகுலின் இடத்திற்கு போட்டியில் இருக்கும் இரண்டு வீரர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் ஏற்கனவே விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரராக ரஜத் பட்டிதார் அணியில் இணைந்திருந்த வேளையில் தற்போது கே.எல் ராகுலுக்கு பதிலாக இரண்டாவது போட்டிக்கான அணியில் சர்பராஸ் கான் இணைந்துள்ளார், எனவே நிச்சயம் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த இரண்டாவது போட்டியின் போது அறிமுகமாவது உறுதி.

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்காக போட்டியிடும் 3 வீரர்கள். யாருக்கு வாய்ப்பு அதிகம்? – விவரம் இதோ

ஆனால் அதில் யார் அறிமுகமாகப்போவது யார்? என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கைகளில் தான் இருக்கிறது. ரஜத் பட்டிதார் பெருபாலும் டாப் ஆர்டரில் விளையாடியவர் ஆனால் சர்பராஸ் கான் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உடையவர். எனவே சர்பராஸ் கான் தான் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் சர்பராஸ் கான் மிடில் ஆர்டரில் மலை போல் ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement