ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்காக போட்டியிடும் 3 வீரர்கள். யாருக்கு வாய்ப்பு அதிகம்? – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவியுள்ளதால் தொடரின் ஆரம்பத்திலேயே இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மேலும் பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துள்ளது.

ஏற்கனவே விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெறாத வேளையில் தற்போது முதலாவது போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இந்த சூழலை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே அனைவரது எதிர்பாப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா விளங்கியுள்ளதால் அவரது இடத்தில் விளையாடப்போவது யார் என்ற மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஜடேஜா பேட்டிங்கில் அசத்துவதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தக்கூடியவர். எனவே அவரது இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி பலரது மத்தியில் இருந்து வருகிறது. இந்த பட்டியலில் மூன்று பேர் அவரது இடத்திற்கு போட்டியில் உள்ளனர். அதில் முதலிடத்தில் இருப்பவர் குல்தீப் யாதவ் தான். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் மிகச்சிறப்பான பந்துவீச்சை சமீப காலமாகவே வெளிப்படுத்தி வருகிறார் என்பதனால் அவருக்கு இந்த இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதேபோன்று அவருக்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஜடேஜாவை போன்று வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங்கில் கைகொடுக்க கூடியவர் என்பது மட்டும் இன்றி சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுவார் என்பதனால் அவருக்கு இரண்டாம் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வலையில் விழுந்துட்டாங்க.. இனிமேல் அதையும் செய்ய முடியாம இந்தியா குழம்புவாங்க.. மைக்கேல் வாகன் கருத்து

மூன்றாவதாக சவுரப் குமார் ஜடேஜாவின் இடத்திற்கு மாற்றுவீராக பார்க்கப்படுகிறார். இந்திய அணியில் ஏற்கனவே அவர் சேர்க்கப்பட்டிருந்தாலும் இதுவரை அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்ததில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு நாட்கள் பயிற்சி போட்டியிலும் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததால் அவரும் இந்த வாய்ப்புக்காக போட்டியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement