உங்களுக்கு இதே வேலையா? ரோகித்துடன் ஒப்பிட்டு பாண்டிங்கை மட்டமாக பேசிய கம்பீர் – ஆதாரத்துடன் ரசிகர்கள் பதிலடி

Rohit Sharma Ricky ponting rohit Sharma
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஜனவரி 12ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெற்ற வரும் 2வது போட்டியில் 216 ரன்களை வெற்றி இலக்காக துரத்தி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் இந்திய பேட்டிங்கின் தூண்களாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் போட்டியில் முறையே 83 மற்றும் 113 ரன்களை விளாசி பார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

குறிப்பாக 2020க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் கேப்டன் ரோகித் சர்மா அப்போட்டியில் விளையாடிய விதம் பார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. மறுபுறம் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த கதைக்கு ஏற்கனவே 2022 ஆசியக் கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி அதன்பின் மேலும் 2 சதங்களை அடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் – பாண்டிங் ஒப்பீடு:
ஆனால் ரோஹித் சர்மா விளையாடிய விதத்திற்கு இரட்டை சதமடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நீங்கள் விட்ட வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலி சதமடித்து விட்டார் என்று ரசிகர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வர்ணனையாளராக பேசினார். அதை விட அப்போதெல்லாம் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதுடன் 5 பீல்டர்கள் உள் வட்டத்திற்குள் நிறுத்தப்படுவதால் விராட் கோலி அடிக்கும் சதங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று பேசிய அவரது கருத்து ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்களை அடித்துள்ள ரோகித் சர்மா இன்னும் ஒரு சதமடித்தால் 30 சதங்களை அடித்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்ய உள்ளார். ஆனால் கடந்த 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்தது உட்பட கடந்த நான்கைந்து வருடங்களில் மட்டும் தான் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு 20 சதங்களை அடித்ததாக தெரிவிக்கும் கௌதம் கம்பீர் அதற்கு முன்பாக அவர் சுமாராக செயல்பட்டதாக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது போட்டியில் நேரலையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆச்சரியமான உண்மை என்னவெனில் கடந்த நான்கைந்து வருடங்களில் தான் ரோகித் சர்மா நிறைய சதங்களை அடித்தார். குறிப்பாக 5 – 6 வருடங்களுக்கு முன்பாக அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை. அவர் நிச்சயமாக 20 சதங்களை கடந்த 5, 6, 7 வருடங்களில் அடித்துள்ளார்” என்று கூறினார். அப்போது அவருடன் பேசிய மற்றொரு வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் நீங்கள் அதை தவற விட்டு விட்டீர்கள் என்று பாண்டிங் உடனான ஒப்பீட்டை நியாபகப்படுத்தினார். அதற்கு கௌதம் கம்பீர் சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தது பின்வருமாறு.

“இல்லை. ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங்கை விட சிறந்த வீரர். ஏனெனில் ரிக்கி பாண்டிங் இந்திய துணை கண்டத்தில் சுமாரான (ஆங்கிலாந்தில் ஷிட் வார்த்தையை பயன்படுத்தி) சாதனையை மட்டுமே வைத்துள்ளார்” என்று கூறினார். இங்கே ரோகித் சர்மாவை பற்றி அவர் கூறியது உண்மை தான். அதாவது தன்னுடைய 29 சதங்களில் 19 சதங்களை 2017 – 2022 வரையிலான காலகட்டத்தில் தான் ரோஹித் சர்மா அடித்தார்.

- Advertisement -

ஆனால் ரிக்கி பாண்டிங் பற்றி அவரது கருத்து முற்றிலும் தவறானது. ஏனெனில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 2894 ரன்களை 41.34 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள பாண்டிங் 6 சதங்களை அடித்துள்ளார். மறுபுறம் இலங்கையில் 25, வங்கதேசத்தில் 30 என இதர ஆசிய நாடுகளில் ரோகித் சர்மா சுமாரான சராசரியையே கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:IND vs SL : இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஏன் ஆடவில்லை – ரோஹித் சர்மா பதில்

அப்படிப்பட்ட நிலையில் உண்மை தெரியாமல் வேண்டுமென்றே தினம்தோறும் இப்படி ஒருவரை உயர்த்தியும் ஒருவரை தாழ்த்தியும் மாற்றி மாற்றி பேசுவது தான் உங்களது வேலையா? பாண்டிங்க் காலத்தில் 5 ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்கு வெளியே இல்லையா? என்று கம்பீரை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

Advertisement