
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்ததாக நடைப்பெற்ற 2வது போட்டியிலும் தடுமாற்றமாக விளையாடிய இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 264/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 46.2 ஓவரில் 265/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் ஆரம்பத்திலேயே வென்று அசத்தியுள்ளது.
அந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இப்போது சந்தோசமா? என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் இடது கை மணிக்கட்டு ஸ்பின்னரான அவர் சைனாமேன் எனப்படும் வித்தியாசமான பவுலிங் ஆக்சன் கொண்டவர்.
அதன் காரணமாக கணிசமான ரன்கள் வழங்கினாலும் அவர் விக்கெட் டேக்கிங் பவுலராக செயல்படுவார். சொல்லப்போனால் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதிலும் அவரை கௌதம் கம்பீர் பெஞ்சில் அமர வைத்தார். அடுத்ததாக ஆசியக் கோப்பையில் கிடைத்த போட்டிகளில் அசத்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
அடுத்ததாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு பெரிய மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் அவரை விளையாட வைப்பது அவசியம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பல முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர். அதற்காக வாஷிங்டன் சுந்தரை நீக்கலாம் என்று இர்பான் பதான் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 23 போட்டியில் 1000 ரன்ஸ்.. புதிய இந்திய நட்சத்திரம் பிரதிகா உலக சாதனை சமன் – மந்தனாவுடன் சேர்ந்து 2 சாதனை
அதன் படி ஒருவேளை 2வது போட்டியில் குல்தீப் விளையாடியிருந்தால் ஆடம் ஜாம்பா போல 3 – 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருக்கலாம். ஏனெனில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களே தவிர ஆடம் ஜாம்பா போல முதன்மை ஸ்பின்னர்கள் கிடையாது. இருப்பினும் பேட்டிங்கை ஆழப்படுத்துவதற்காக தனது முடிவில் பிடிவாதமாக நிற்கும் கௌதம் கம்பீர் யார் பேச்சையும் கேட்காமல் குல்தீப்பை பெஞ்சில் அமர வைத்து ஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவின் சோளியை முடித்துள்ளதாக ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.