23 போட்டியில் 1000 ரன்ஸ்.. புதிய இந்திய நட்சத்திரம் பிரதிகா உலக சாதனை சமன் – மந்தனாவுடன் சேர்ந்து 2 சாதனை

Pratika Rawal
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நவி மும்பையில் 24வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமையில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போது கடைசி நேரத்தில் மழை வந்தது. அதனால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்தியா 340/3 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா சதத்தை அடித்து 109 (95) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

புதிய நட்சத்திரம்:

அவருடன் இணைந்து 33.2 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை அடித்து 122 (134) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிகஸ் 76* (55) ரன்கள் குவித்தார். முன்னதாக 25 வயதாகும் இளம் வீராங்கனை பிரதிகா கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

ஆரம்பம் முதலே சீராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இப்போட்டியையும் சேர்த்து 23 ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 1000 ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. பிரதிகா ராவல்: 23
1. லிண்ட்சே ரீலர்: 23
2. மெக் லென்னிங்: 25
2. நிக்கோல் போல்டன்: 25

- Advertisement -

மந்தனாவுடன் உலக சாதனை:

இப்போட்டியில் மந்தனாவுடன் சேர்ந்து அவர் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதற்கு முன் ஏற்கனவே அந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை மந்தனா – ராவல் சமன் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 17 சதங்கள்.. 2025இல் மட்டும் 5.. மகளிர் கிரிக்கெட்டின் கில்லியாக.. இந்தியாவின் மந்தனா 2 உலக சாதனை சமன்

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி – மெக் லென்னிங், இங்கிலாந்தின் எமி ஜோன்ஸ் – டம்மி பியூமோண்ட், தென்னாபிரிக்காவின் டஸ்மின் பிரிட்ஸ் – லாரா வோல்டர்ட் ஆகியோரும் தலா 2 முறை 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். மேலும் ஒரு மகளிர் உலகக் கோப்பை போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் ராவல் – மந்தனா அழைத்துள்ளனர். இதற்கு முன் 2022 மகளிர் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கௌர் – ஸ்ம்ரிதி மந்தனா 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.

Advertisement