நீங்க பண்ணது அநியாயம். என்னது பண்றது இதுதான் கர்மா. 4 ஆவது தோல்விக்கு பின் இங்கிலாந்து அணியை – விமர்சிக்கும் ரசிகர்கள்

ENG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளின் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும், அற்புதமான பந்துவீச்சாளர்களையும் கொண்ட இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இந்த தொடரானது அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு மோசமான தொடராக மாறி வருகிறது.

ஏனெனில் இதுவரை அவர்கள் விளையாடியுள்ள 5 லீக் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பின்தங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது 156 ரன்களை மட்டுமே குவிக்க பின்னர் அதனை எளிதாக துரத்திய இலங்கை அணி 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்து மோசமான நிலையை சந்தித்துள்ளது. இனி எதிர்வரும் நான்கு லீக் போட்டிகளில் இங்கிலாந்து அணி இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என மூன்று பலமான அணிகளுக்கு எதிராக விளையாட இருப்பதால் அதில் ஏதாவது ஒரு போட்டியில் அவர்கள் தோற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு என்பது முடிந்துவிடும்.

இந்நிலையில் இப்படி இங்கிலாந்து அணி சிக்கலில் சிக்கி தவிக்க காரணம் கர்மாதான் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது இறுதிப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியே அந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் அந்த போட்டியின் கடைசி கட்ட சூழலில் சில மோசமான விதிமுறைகளால் அவர்கள் கோப்பையை இழக்க நேர்ந்தது. ஏனெனில் அந்த இறுதிப் போட்டியின் போது மூன்று வகையில் நியூசிலாந்து அணிக்கு அநியாயம் நிகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். 1) கடைசி சில பந்துகள் மட்டுமே மீதம் இருக்கையில் குப்தில் அடித்த த்ரோ பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் த்ரோ வகையில் நான்கு ரன்கள் கிடைத்தது. 2) அதோடு சூப்பர் ஓவரில் போட்டி சமன் செய்யப்பட்டபோது மற்றொரு சூப்பர் ஓவர் வைக்காமல் போனது.

இதையும் படிங்க : இவருக்கா இந்த நிலைமை.. கையேந்தி உதவி கேட்கும் பரிதாப நிலையில் கிரேக் சேப்பல்.. நடந்தது என்ன?

3) சூப்பர் ஓவரில் போட்டி சமனில் முடிந்த பின்னர் பவுண்டரிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்துக்கு வழங்கியது என மூன்று அநியாயங்கள் அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நிகழ்ந்தது. இப்படி எல்லாம் நடந்து நீங்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதால் தான் இந்த ஆண்டு உங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது. இம்முமரை நிச்சயம் உங்களால் அரையிறுதிக்கு கூட செல்ல முடியாது இதுதான் கர்மா. அதன் பலனை நீங்களே அனுபவித்து வருகிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement