இவருக்கா இந்த நிலைமை.. கையேந்தி உதவி கேட்கும் பரிதாப நிலையில் கிரேக் சேப்பல்.. நடந்தது என்ன?

- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பலை தெரிந்திருக்காத 90ஸ் இந்திய ரசிகர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில் சூதாட்டப் புகாரில் சிக்கி தவித்த இந்திய அணியை கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி மிகச் சிறப்பாக வழி நடத்தி 2002 நாட்வெஸ்ட் கோப்பை போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான அணியாக மாற்றி புதிய பாதையில் நடக்க வைத்தார்.

அப்படி சிறப்பாக சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் குறுகிய காலத்திலேயே கேப்டன் கங்குலியுடன் கருத்து வேறுபாடு காரணமாக மோதலில் ஈடுபட்டார். குறிப்பாக கேப்டனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒன்று சேர்ந்து அணியை வழிநடத்தாமல் முரண்பாடான கண்ணோட்டத்தை கொண்டிருந்த அவர் கங்குலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

பரிதாப நிலையில் சேப்பல்:
மேலும் ராகுல் டிராவிட் தலைமையில் 2007 உலகக் கோப்பையில் களமிறங்கிய இந்திய அணியில் சச்சினை மிடில் ஆர்டரில் களமிறக்கி அவர் செய்த தாறுமாறான மாற்றங்கள் வரலாற்றுச் தோல்வியை பரிசளித்தது. அதன் காரணமாக 2007இல் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய அவர் தற்போது வருணையாளராக அவ்வப்போது சில விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேக் சேப்பல் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதனால் நண்பர்கள் உதவியுடன் தம்முடைய வாழ்வாதார நிதியை திரட்டுவதற்கு அவர் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக மெல்போர்ன் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சான்றளிக்கும் நிகழ்ச்சியில் தனக்காக அமைக்கப்படும் “கோபண்ட்மீ” எனும் பக்கத்தில் சேர்வதற்கு தயக்கத்துடன் சேப்பல் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதாவது கடந்த வாரம் மெல்போர்ன் நகரில் எட்டி மெக்குரி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் ஏழ்மை நிலைமையில் இருக்கும் தமக்கு உதவி செய்யுமாறு கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் தம்முடைய காலத்தில் விளையாடிய வீரர்களில் தாம் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் இது போல பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மொத்த வெறியையும் இங்கிலாந்து அடுத்ததா இந்தியா மேல காட்ட போறாங்க.. வேதனையிலும் மைக்கேல் வாகன் ஜாலி

அதை அறியும் ரசிகர்கள் இவருக்கா இந்த நிலைமை என்று பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றனர். முன்னதாகவே 1970 – 80 காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவுக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கிரேக் சேப்பல் 24 சதங்கள் உட்பட 7110 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக அந்த சமயத்தில் டான் பிராட்மேனை (6996) அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரராக அவர் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement