- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக்கின் தடுமாற்றத்தால் மீண்டும் தம்பியின் பக்கம் சாயும் ரசிகர்கள் – என்ன டிகே இப்படி பண்றீங்க

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அடுத்தடுத்து தோற்கடித்து அசத்தியது. அதை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஏனெனில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 15 (14) கேஎல் ராகுல் 9 (12) விராட் கோலி 12 (11) தீபக் ஹூடா 0 (3) ஹர்டிக் பாண்டியா 2 (3) என டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் அனலான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு தினேஷ் கார்த்திக் உடன் கைகோர்த்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். 6வது விக்கெட்டுக்கு முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கடைசி வரை அதிரடி துவங்காமல் மெதுவாகவே விளையாடிய தினேஷ் கார்த்திக் 6 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் வேறு ஏதோ பிட்சில் விளையாடுவது போல் அட்டகாசமாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (40) ரன்கள் குவித்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றி கடைசியில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மீண்டும் நிரூபணம்:
மறுபுறம் அசத்தலாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 134 ரன்களை துரத்திய அந்த அணிக்கு டீ காக் 1 (3) ரிலீ ரோசவ் 0 (2) என முக்கிய வீரர்கள் அரஷ்தீப் சிங்கிடம் சரணடைந்த நிலையில் கேப்டன் பவுமா 10 ரன்களில் ஷமியிடம் அவுட்டானார். அதனால் 24/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 52 (41) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய மில்லர் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 59* (46) ரன்கள் குவித்து பினிசிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 137/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. மறுபுறம் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறியதால் போராடி தோற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தோல்விக்கு சூரியகுமார் தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்களின் சுமாரான ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக புதிய பந்தில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி சென்ற நிலையில் சூர்யாவுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் 15 பந்துகளை எதிர்கொண்டு செட்டிலாகி நல்ல வாய்ப்பு கிடைத்தும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் வெறும் 6 ரன்களில் அவுட்டாகி பினிஷிங் செய்ய தவறியது முக்கிய காரணமாக அமைந்தது.

முழுமையாக அவரை பழி சொல்ல முடியாது என்றாலும் அவர் மட்டும் அதிரடியாக 10 – 20 ரன்களை எடுத்திருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும். முன்னதாக கடந்த 2004இல் அறிமுகமான இவர் 2019 உலகக்கோப்பை செமி பைனல் உட்பட அழுத்தம் வாய்ந்த முக்கிய போட்டிகளில் இப்படி சொதப்புவதை வழக்கமாக வைத்திருப்பதாலேயே தோனியை மிஞ்சி சிறப்பாக செயல்பட முடியாமல் தனது கேரியரை தொலைத்தார்.

- Advertisement -

ஆனால் 37 வயதில் கடுமையாக போராடி பெற்றுள்ள இந்த வாய்ப்பில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் ஒயிட் வலையில் சிக்கி வெற்றியை தாரை வார்க்க தெரிந்த அவர் நெதர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் எளிதான ஸ்டம்பிங்கை தவற விட்டார்.  தற்போது இந்த போட்டியில் அற்புதமான வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட்டுள்ள அவர் அழுத்தமான போட்டிகளில் சொதப்புவேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஏனெனில் உலகக்கோப்பைகளில் அவரது ஸ்கோர்கள் பின்வருமாறு. 8, 6, 11, 17, 0, 16, 13, 1, 6.

இதனால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் மிடில் ஆர்டரில் நிலவும் இடது கை பேட்ஸ்மேன் பஞ்சத்தை போக்கும் வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அனுபவம் நிறைந்த ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கேட்க துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : வீடியோ : டேவிட் மில்லரை மான்கட் செய்ய நினைத்த அஷ்வின் – முக்கிய கட்டத்தில் கூட என்ன மாதிரி ஒரு யோசனை

ஏனெனில் அவர் சாதாரண போட்டிகளில் தடுமாறினாலும் இது போன்ற அழுத்தம் வாய்ந்த பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.

- Advertisement -