டேவிட் மில்லரை மான்கட் செய்ய நினைத்த அஷ்வின் – முக்கிய கட்டத்தில் கூட என்ன மாதிரி ஒரு யோசனை

Ashwin-and-David-Miller
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆண்களை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடம் வகித்திருந்த வேளையில் இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் தங்களது முதல் இடத்தை இழந்துள்ளது.

ஆனாலும் அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தங்களது அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் மோசமான பீல்டிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியின் 18-வது ஓவரின் போது முக்கிய கட்டத்தில் பந்துவீச ஓடி வந்து பாதியிலேயே பந்து வீசுவதை நிறுத்தி விட்டு டேவிட் மில்லரை மான்கட் செய்ய நினைத்தார். ஆனால் அஷ்வின் பந்து வீசுவதை நிறுத்தியதை கவனித்த டேவிட் மில்லர் மீண்டும் பேட்டை கிரீசுக்குள் கொண்டு வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக டேவிட் மில்லர் மான்கட் விக்கெட்டில் இருந்து தப்பித்தார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவர் பட்லரை மான்கட் செய்யும்போது ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தது. ஆனால் தற்போது ஐசிசி மான்கட் விதிமுறையை மாற்றி மான்கட் செய்யும்போது ரன் அவுட் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதையும் படிங்க : இவருக்கு எண்டே கிடையாதா? எத்தனை நாள் தான் 10 பேரோட விளையாடறது – சொதப்பல் மன்னன் மீது ரசிகர்கள் கோபம்

அதனை தொடர்ந்து இந்த போட்டியில் அஸ்வின் மான்கட் செய்ய நினைத்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement