உலக கிரிக்கெட் ரசிகர்கள் அவருடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2013 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து இத்தொடரை நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது
அப்படி உலக சாம்பியனை தீர்மானிக்க போகும் இந்த தொடருக்கான முழுமையான அட்டவணையை கடந்த மாதம் பிசிசிஐ வெளியிட்டது.
அந்த அட்டவணையில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் மோதும் என்று அறிவிக்கப்பட்டது இரு நாட்டு ரசிகர்களிடம் உச்சகட்டை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அன்றைய நாளில் நவராத்திரி திருவிழா நடைபெறுவதால் அகமதாபாத் நகரில் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அகமதாபாத் காவல்துறை தெரிவித்து விட்டது.
விளாசும் ரசிகர்கள்:
அதனால் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் முன்பாக அக்டோபர் 14ஆம் தேதி அப்போட்டியை நடத்தும் வகையில் புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்திருந்தார். மேலும் அப்போட்டியின் தேதி மாறியுள்ளதால் அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய நாளில் கொல்கத்தாவில் மிகவும் புகழ்பெற்ற காளியம்மன் திருவிழா நடைபெறுவதால் அப்போட்டிக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அங்குள்ள காவல் துறை தற்போது கைவிரித்துள்ளதாக பிரபல இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் காளி பூஜை விழா 2வது மிகப்பெரிய திருவிழாவாக அங்குள்ள மக்களால் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அப்போது திருவிழா கூட்டத்தை சரியான வகையில் நடத்தி பாதுகாப்பு வழங்குவதற்கான கடமை கொல்கத்தா காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு தேவையான ஆதரவு வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்து விட்டது.
இதன் காரணமாக பெங்கால் வாரியம் அப்போட்டியின் தேதியை மாற்றுமாறு பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் போட்டிக்கும் புதிய தேதியை பிசிசிஐ ஆலோசித்து நிர்ணயிக்கும் என்று தெரிய வருகிறது. இதன் வாயிலாக பல்வேறு கலாச்சாரம் மற்றும் மாநிலங்கள் நிறைந்த இந்தியாவில் போட்டி நடைபெறும் நகரங்களில் எந்த வகையான திருவிழாக்கள் நடைபெற உள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரியான திட்டமிடல் இன்றி உலகக்கோப்பை அட்டவணையை அவசரமாக பிசிசிஐ தயாரித்து வெளியிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
அதை பார்க்கும் ரசிகர்கள் உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் 60 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் முழுமையான அட்டவணையை கூட வெளியிடாமல் இருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா’வை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ சமீப காலங்களில் மழை பெய்த போது அதை உலர்த்துவதற்கு தேவையான நவீன வசதிகள் செய்து கொடுக்காததால் மைதான பராமரிப்பாளர்கள் ஹேர் டிரையரை பயன்படுத்தி காய வைத்தது இந்தியாவின் மானத்தை வாங்கும் வகையில் அமைந்தது.
இதையும் படிங்க:IND vs WI : முதல் இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை செய்ய காத்திருக்கும் – யுஸ்வேந்திர சாஹல்
அந்த வரிசையில் தற்போது உலகக்கோப்பை அட்டவணை குளறுபடியும் இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அது போக டிஜிட்டல் இந்தியா என்று குஜராத்தை சேர்ந்த தலைவர்கள் மார் தட்டும் நிலையில் இந்த உலகக் கோப்பைக்கு ஆன்லைன் கிடையாது கவுண்டர்களில் தான் கூட்ட நெரிசலுடன் அடித்துக்கொண்டு வாங்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.