- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் ஒழிக.. கௌகாத்தியில் ஒலித்த ரசிகர்கள் குரல்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. நடந்தது என்ன?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்றது. அத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது மிகப்பெரிய மோசமான சாதனை தோல்வியை சந்தித்தது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. இது போக ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கம்பீர் ஒழிக குரல்:

அந்தத் தோல்விகளுக்கு இந்தியா பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்த தேவையற்ற மாற்றங்கள், தவறான தேர்வுகளும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து கௌதம் கம்பீர் விலக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

முன்னதாக நேற்றைய ஆட்டத்தின் முடிவில் கௌகாத்தி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோல்வியால் மிகப்பெரிய விரக்தியில் ஆழ்ந்தனர். அதற்கு கௌதம் கம்பீர் தான் காரணம் என்று கருதிய ரசிகர்கள் அவர் மைதானத்துக்கு வந்ததும் “கம்பீர் ஒழிக, கம்பீர ஒழிக” மற்றும் “கம்பீர் திரும்பச் செல்லுங்கள்” என்று ஆக்ரோசமாக முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைப் பார்த்த கௌதம் கம்பீர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

- Advertisement -

போலீஸ் நடவடிக்கை:

இருப்பினும் இந்திய வீரர் முகமது சிராஜ் பொறுமை இழக்காதீர்கள் அமைதியாகுங்கள் என்று முழக்கமிட்ட ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதே போல பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் ரசிகர்கள் அருகே சென்று. “இந்திய அணிக்காக உண்மையான மனதுடன் பாடுபடுவருக்கு எதிராக ஏன் முழக்கமிடுக்கிறீர்கள்?” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: சொந்தக்காரர் இல்லாத கம்பீர் தோல்விக்கு காரணமில்ல.. அவங்க தான் பொறுப்பை காட்டனும்.. அஸ்வின் விமர்சனம்

இருப்பினும் தொடர்ந்து முழக்கம் வந்ததால் பிசிசிஐ அணி நிர்வாகிகள் மைதானத்தில் இருந்த காவலர்களிடம் புகார் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட காவலர்கள் முழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நபரை பிடித்து கைது செய்து நிலைமையை சீர்படுத்தினர். அதைப் பார்த்த மற்ற ரசிகர்கள் இந்திய அணியின் வரலாற்று தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தினால் அடக்குமுறை செய்வீர்களா? என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -