சொந்தக்காரர் இல்லாத கம்பீர் தோல்விக்கு காரணமில்ல.. அவங்க தான் பொறுப்பை காட்டனும்.. அஸ்வின் விமர்சனம்

R Ashwin
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. அத்துடன் 2வது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் இந்திய தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் மீண்டும் சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்துள்ளதால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதவி விலக வேண்டுமென்று ரசிகர்கள் போர்க்கடி உயர்த்தியுள்ளனர். ஏனெனில் அந்த 2 படுதோல்விகளும் அவர் பயிற்சியாளராக வந்த பின்பே கிடைத்துள்ளது.

- Advertisement -

கம்பீர் காரணமில்லை:

அத்துடன் சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் தோல்விக்கு காரணமாவதாக ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் இந்திய வீரர்கள் பொறுப்பின்றி விளையாடியதால் கிடைத்த தோல்விக்குகம்பீர் மட்டும் காரணமில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே அவரை மட்டும் ரசிகர்கள் மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பயிற்சியாளரால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியை உங்களிடம் நான் கேட்கிறேன். பயிற்சியாளர் வீரருக்கு தொடர்ச்சியான ஆதரவு கொடுக்க வேண்டும், நிறைய மாற்றங்கள் செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விளையாடுவதற்கான திறனை பெறுவது வீரர்களின் பொறுப்பு. ஒரு வீரராக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதை கட்டுப்படுத்த வேண்டும். முடிவுகள் எடுப்பது கேப்டன், பயிற்சியாளர் கையில் இருக்கிறது. அதை விடுங்கள்”

- Advertisement -

அஸ்வின் ஆதரவு:

“பயிற்சியாளர் மட்டுமே பிரச்சனை என்ற சொல்வதற்கு நம்முடைய வீரர்கள் போதுமானளவு பொறுப்புடன் விளையாடியதாக எனக்குத் தெரியவில்லை. மாவு இருந்தால் தான் உங்களால் சப்பாத்தி செய்ய முடியும், மாவே இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்று நாங்கள் தமிழில் சொல்வோம். முடிவெடுத்தல் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”

“அதற்காக கௌதம் கம்பீர் என்ற தனிப்பட்ட நபர் மேலே செய்யப்படும் தாக்குதலை நான் விரும்பவில்லை. ஏனெனில் நாம் எப்போதும் ஒருவரை குறை சொல்ல பார்க்கிறோம். ஒரு அணியை நிர்வகிப்பது மிகவும் எளிது கிடையாது. தோல்வியால் கம்பீரும் வலியை சந்தித்திருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: மூளை மழுங்கினா தான் இப்படிப்பட்ட அணியை செலக்ட் பண்ணி தோற்பாங்க.. கம்பீர், அகர்கரை விளாசிய பிரசாத்

“அதற்காக ஒருவரை பதவி நீக்கம் செய்வது நன்றாக இருந்தாலும் அது அப்படி இருக்கக்கூடாது. இங்கே நான் யாரையும் ஆதரிக்கவில்லை. கௌதம் என்னுடைய சொந்தக்காரரும் கிடையாது. நாம் செய்த 10 தவறுகள் பற்றி என்னால் சொல்ல முடியும். தவறுகள் நடக்கும். ஆனால் இங்கே யார் வேண்டுமானாலும் தவறு செய்பவர்களாகவே இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement