
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால் அந்தப் போட்டியில் 95% இருக்கைகள் இருக்கிறது.
அதற்கு 2 விஷயங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் இப்போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் ஒருவர் கூட இல்லாமல் களமிறங்கியுள்ளது. நட்சத்திர வீரர்களாக கருதப்படும் அவர்கள் கடந்த பல வருடங்களாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியிள்ளார்கள்.
இருப்பினும் தற்போது அவர்கள் ஓய்வு பெற்றதால் இப்போட்டியில் இந்தியாவுக்காக விளையாடவில்லை. போதாக்குறைக்கு வெஸ்ட் இண்டீஸ் தரமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் விராட், ரோஹித், அஸ்வின் ஆகிய 3 நட்சத்திரங்கள் இல்லாத போட்டியைப் பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார்.
அப்படிப்பட்ட அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது அவருடைய ஆட்டத்தை பார்க்க தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் நிரம்பி வழியும் அளவுக்கு ரசிகர்கள் வந்திருந்தனர். அதனால் ஒருவேளை இப்போட்டியில் விராட் கோலி விளையாடியிருந்தால் குறைந்தது 40 – 50% மைதானம் நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் வந்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.
அதனால் விராட் கோலியின் அருமை மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் பவர் இப்போது தெரிகிறதா? என்று சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இது போக ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட், பெர்த் ஆகிய 5 மைதானங்களில் மட்டுமே அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் நடக்கும்.
இதையும் படிங்க: இந்தியாவில் க்ரீன் டாப் அடிக்கடி கிடைக்காது.. உழைக்காம யாரும் சும்மா அதை தரமாட்டாங்க.. சிராஜ் பேட்டி
அதே போல இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை போன்ற முதன்மை நகரங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும் என்று விராட் கோலி பிசிசிஐக்கு பலமுறை கோரிக்கை வைத்தார். ஏனெனில் மெட்ரோ நகரங்களில் போட்டிகளை நடத்தும் போது ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்றும் விராட் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை இதுவரை பிசிசிஐ ஏற்காதது அகமதாபாத் மைதானம் காலியாக இருக்க 2வது காரணம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.