இந்தியாவில் க்ரீன் டாப் அடிக்கடி கிடைக்காது.. உழைக்காம யாரும் சும்மா அதை தரமாட்டாங்க.. சிராஜ் பேட்டி

Mohammed Siraj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 162 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரிவ்ஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, ஜஸ்ப்ரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடும் இந்திய அணி இப்பதிவிடும் போது முன்னிலைப் பெற்று வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக இந்தியாவில் சமீப காலங்களாகவே சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டு வந்தது.

- Advertisement -

க்ரீன் டாப் பிட்ச்:

கடைசியில் அதுவே நியூசிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் சொந்த மண்ணில் இந்தியா அவமான ஒயிட்வாஸ் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது. அதனால் இப்போட்டிக்கான பிட்ச் கொஞ்சம் பச்சை புற்களுடன் வேகத்துக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் 10இல் 7 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் இந்தியாவில் இது போன்ற பிட்ச்கள் அடிக்கடி கிடைப்பதில்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்தப் பிட்ச்சிலும் கடினமாக உழைக்காமல் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் எளிதாக விக்கெட்டை கொடுத்து விட மாட்டார்கள் என்று சிராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்புறமாறு. “க்ரீன் டாப் பிட்ச் மேலே பந்து வீச நான் உற்சாகத்துடன் இருந்தேன். அது இந்தியாவில் எங்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை. கடைசியாக கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் அது போன்ற பிட்ச் எங்களுக்கு கிடைத்தது”

- Advertisement -

உழைத்தால் மட்டுமே விக்கெட்:

“இங்கிலாந்து தொடருக்குப் பின் 3 வாரங்கள் ஓய்வெடுத்த நான் மீண்டும் பயிற்சி எடுத்து இந்தியா ஏ அணிக்காக விளையாடினேன். நீங்கள் நீண்ட இடைவெளி எடுக்கும் போது உங்களுடைய ரிதத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். நான் இங்கிலாந்தில் பெற்ற என்னுடைய ரிதத்தை இங்கேயும் பின்பற்றுகிறேன். இந்தியா ஏ அணிக்காக விளையாடும் போதும் லக்னோவில் அதிக வெப்பம் இருந்தாலும் இத்தொடருக்கு நன்றாக தயாரானேன்”

இதையும் படிங்க: இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டின் சாதனையை தகர்த்து அசத்திய கே.எல் – விவரம் இதோ

“இங்கேயும் 4 விக்கெட்டுகளை எடுப்பதற்கு நான் கடினமாக உழைத்தேன். இங்கிலாந்திலும் விக்கெட்டுகளை எடுக்க நான் கடினமாக உழைத்தேன். ஏனெனில் நீங்கள் எளிதாக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. இன்று எனக்கு யாரும் 5வது விக்கெட்டை வழங்கவில்லை. 4 விக்கெட்டுகளையும் நான் கடினமாக உழைத்தே எடுத்தேன்” என்று கூறினார்.

Advertisement