இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டின் சாதனையை தகர்த்து அசத்திய கே.எல் – விவரம் இதோ

KL Rahul and Duckett
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போட்டியின் இரண்டாம் நாளான இன்று அற்புதமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல்நாள் ஆட்டத்தின் போது தங்களது முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு சுருண்டது.

பென் டக்கெட்டை பின்னுக்கு தள்ளிய கே.எல் ராகுல் :

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்தது. பின்னர் போட்டியின் இரண்டாம் நாளான இன்றும் மிகச் சிறப்பான விளையாடி ரன்களை குவித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தனது 11-ஆவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தியிருந்தார். அதனால் ரசிகர்கள் மத்தயில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் குறிப்பிட்ட சில சாதனைகளை அவர் எட்டிப் பிடித்துள்ளார்.

அதன்படி 2016-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது சதத்தை சொந்த மண்ணில் பதிவு செய்துள்ளார். அதோடு இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரரான பென் டக்கெட்டின் சாதனை ஒன்றினையும் அவர் பின்னுக்கு தள்ளி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் : இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த துவக்க வீரராக பென் டக்கெட் 602 ரன்களுடன் இந்த போட்டிக்கு முன்னதாக முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் கே.எல் ராகுல் தற்போது 649 ரன்களுடன் பென் டக்கெட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் சாய் சுதர்சனின் தடுமாற்றத்திற்கு காரணமே இதுதான் – பார்த்திவ் பட்டேல் விளக்கம்

இவர்கள் இருவருக்கு அடுத்து இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 479 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உஸ்மான் கவாஜா 461 ரன்களுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் கிராவுலி 414 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement