இவர் எப்போவுமே கேப்டன்ஷிப்க்கு சரிப்பட்டு வரமாட்டார் – ஆதாரத்துடன் கேஎல் ராகுலை வெளுக்கும் ரசிகர்கள்

KL Rahul Shami
- Advertisement -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 28-ஆம் தேதியன்று நடந்த 4-வது லீக் போட்டியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 158/6 ரன்களை எடுத்தது. ஒரு கட்டத்தில் 29/4 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர்கள் தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் படோனி 54 ரன்களும் எடுத்தனர். குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

சொதப்பல் ராகுல்:
அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 ரன்கள், மேத்யூ வேட் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ராகுல் தேவாடியா 40* ரன்களும் அபினவ் மனோகர் 15* ரன்களும் எடுத்து அபார பினிசிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதனால் வரலாற்றின் தங்கள் முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்த லக்னோ அணி இந்த வருடம் ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவங்கியது.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் குஜராத் வீரர் முகமது சமி வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் இப்படி முதல் பந்திலேயே கேஎல் ராகுல் டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும். இத்தனைக்கும் இந்த வருடம் 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடும் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தவர்.

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:
சரி பேட்டிங்கில் தான் இப்படி சொதப்பினார் என்று பார்த்தால் நேற்றைய போட்டியின் போது அவரின் கேப்டன்ஷிப் அதைவிட மோசமாக அமைந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லை டக் அவுட் செய்த இலங்கை பவுலர் டுஷ்மந்தா சமீரா அடுத்து வந்த விஜய் சங்கரை 4 ரன்களில் அவுட் செய்து 15/2 என்ற சிறப்பான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

அதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து குஜராத் அணியை மீட்க போராடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் மேத்யூ வேட் 30 ரன்களும் எடுத்த போது சுழல் பந்துவீச்சாளர்களான தீபக் ஹூடா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் அற்புதமான பந்துகளில் அவுட்டானார்கள். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து மிரட்டி கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் அவுட் செய்து போட்டியை லக்னோவின் பக்கம் திருப்பினார். அதன் காரணமாக கடைசி 30 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நிலைமை ஏற்பட்டதால் லக்னோ வெற்றி பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது.

- Advertisement -

அந்த நேரம் பார்த்து ஒரு பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான தீபக் ஹூடாவிடம் கேஎல் ராகுல் பந்துவீச 16வது ஓவரை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய குஜராத் வீரர் ராகுல் தேவாடியா அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை பறக்கவிட்டு போட்டியை தலைகீழாக மாற்றினார். அதன்பின் 17-வது ஓவரை மீண்டும் ஒரு சுழல்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோயிடம் வழங்கினார். பொதுவாக இதுபோன்ற கடைசி 5 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களை உபயோகிப்பது தான் சிறந்த செயலாகும். அதிலும் அந்த நேரத்தில் இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து நல்ல பார்மில் இருந்த டுஷ்மந்தா சமீராவுக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்தன. அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்காத கேஎல் ராகுல் சுழல் பந்துவீச்சாளர்களின் பக்கம் திரும்பி தவறான முடிவை எடுத்ததால் கிடைக்க வேண்டிய போராட்ட வெற்றியை குஜராத் அணியிடம் லக்னோ கோட்டை விட்டது.

இதனால் கடுப்பான ரசிகர்கள் கேப்டன் பொறுப்புக்கு இவர் இன்று மட்டுமல்ல எப்போதுமே சரிப்பட்டு வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கின்றனர். ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் காயமடைந்த காரணத்தால் கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்தார். அந்த தொடரின் முதல் போட்டியில் ஆல்-ரவுண்டராக தேர்வு செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு அவர் ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்காதது பெரிய சர்ச்சைக்குள்ளானது.

- Advertisement -

அதுபோல அந்தத் தொடர் முழுவதும் அவர் எடுத்த தவறான முடிவுகளால் ஒரு வெற்றியை கூட பெற முடியாத இந்தியா தரமான வீரர்களை வைத்திருந்த போதிலும் 3 – 0 என்ற கணக்கில் படுமோசமான ஒயிட்வாஷ் சந்தித்தது. ஆனால் அதே தெனாப்பிரிக்க மண்ணில் கடந்த வாரம் டமிம் இக்பால் தலைமையிலான கத்துக்குட்டி வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வச்செய்து 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க : பாக்கெட்டில் 1000 ரூபாய் கூட இல்லாமல் சுற்றினேன் – மோசமான வாழ்க்கையை பகிர்ந்த நட்சத்திர வீரர்

மேலும் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் மழைப்போல ரன்களை பொழிந்த போதிலும் அந்த அணியை ஒருமுறைகூட பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதிலிருந்தே ஒரு தரமான பேட்ஸ்மேனாக விளங்கும் கேஎல் ராகுல் கேப்டன்ஷிப் செய்வதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பது ஆதாரமாகிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement