பாக்கெட்டில் 1000 ரூபாய் கூட இல்லாமல் சுற்றினேன் – மோசமான வாழ்க்கையை பகிர்ந்த நட்சத்திர வீரர்

LSG vs GT Preview
- Advertisement -

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று மார்ச் 28-ஆம் தேதியன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் புதிய கேப்டன் மற்றும் 17 கோடிக்கு வாங்கப்பட்ட நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதே சமயத்தில் குயின்டன் டி காக் 7, மனிஷ் பாண்டே 6 என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

Shami GT IPL 2022

- Advertisement -

குஜராத் வெற்றி:
அடுத்த வந்த எவின் லெவிஸ் 10 ரன்களில் அவுட்டானதால் 29/4 என்ற மோசமான தொடக்கம் பெற்ற லக்னோ அணியை இளம் வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினார்கள். இதில் தீபக் ஹூடா 55 (41) ரன்கள் எடுக்க ஆயுஷ் படோனி 54 (41) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய க்ருனால் பாண்டியா 21* (13) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தப்பிய லக்னோ 158/6 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாக அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 4 ரன்களில் ஏமாற்றினார். இதனால் 15/2 என ஆரம்பத்திலேயே திண்டாடிய குஜராத் அணியை கேப்டன் ஹார்திக் பாண்டியா 33 (28) ரன்களும் மேத்யூ வேட் 30 (29) ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.

LSG vs GT

அடுத்து வந்த அதிரடி வீரர் டேவிட் மில்லர் 30 (21) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அதிரடி சரவெடியாக விளையாடிய ராகுல் தேவாடியா 24 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 40* ரன்களும் இளம் வீரர் அபினவ் மனோகர் வெறும் 7 பந்தில் 3 பவுண்டரி உட்பட 15* ரன்களும் எடுத்து பினிஷிங் செய்தனர். இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் வரலாற்றில் தங்களது முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

- Advertisement -

1000 ரூபாய் கூட இல்ல:
முன்னதாக இந்த போட்டியில் இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் சுத்தமாக இல்லாத நிலையில் தனது சொந்த ஊரான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த ஹர்திக் பாண்டியா வெற்றியுடன் தனது கேப்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வந்த அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்க காரணத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணி நிர்வாகம் 15 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாகவும் நியமனம் செய்தது.

Hardik

தற்போது தன் மீதான நம்பிக்கையை காப்பாற்ற தொடங்கியுள்ள அவர் நேற்றைய போட்டியில் நீண்ட நாட்களுக்குப்பின் பந்துவீசியதுடன் பேட்டிங்கிலும் அசத்தி ஒரு நல்ல ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

இன்று கோடிகளில் புரளும் அவர் ஆரம்ப காலகட்டங்களில் வெறும் 1000 ரூபாய் கூட இல்லாமல் சுற்றியதாக தனது கடினமான வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எனது வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை முதல் முறையாக ஏலத்தில் வாங்குவதற்கு 3 மாதங்கள் முன்பாக கூட எனது வங்கி கணக்கில் வெறும் 1,000 ரூபாய் கூட இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.

Hardik

விடாமுயற்சியால் வெற்றி:
குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிறந்த ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் சேர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தினமும் தொடர்ந்து விளையாடி வந்தனர். அப்போது அவர்களின் திறமையை உணர்ந்த சமீபத்தில் மறைந்த தந்தை ஹிமான்சு தங்களது சொந்த ஊரில் வைத்திருந்த கார் பைனான்ஸ் கம்பெனியை விட்டுவிட்டு தனது மகன்களுக்கு நல்ல கிரிக்கெட் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வதோதரா நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

- Advertisement -

அதன்பின் அங்குள்ள முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் அகாடமியில் இணைந்து வளரத் தொடங்கிய அவர்கள் அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தினம்தோறும் 400 – 500 ரூபாய்களை சம்பாதித்து குடும்பத்திற்கு உதவி வந்தனர். இருப்பினும் அந்த பணம் குடும்பத்தை ஓரளவு ஓட்டுவதற்கு கூட போதாத காரணத்தால் மிகவும் தீவிரமான கிரிக்கெட்டில் ஈடுபட்ட அவர்கள் உள்ளூரில் எங்கே கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அங்கு சென்று தொடர்ந்து பங்கேற்று வந்தனர்.

இதையும் படிங்க : அப்படி சண்டை போட்டவங்களா? இன்னைக்கு ஒரே டீம்ல இவ்ளோ அன்பா இருக்காங்க – நெகிழவைத்த தருணம்

அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விடாமுயற்சி செய்து கவனம் ஈர்த்த அவர்களை கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நல்ல தொகைக்கு ஜோடியாக வாங்கியது. அதன்பின் அந்த அணி அடுத்தடுத்து வென்ற கோப்பைகளில் முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா அதன் வாயிலாக 2016-ஆம் ஆண்டு இந்திய அணியிலும் காலடி வைத்து இன்று இந்திய கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உருவெடுத்து பல கோடி ரூபாய்களை சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement