லெஜெண்ட்ஸ் லீக் : வாயில் பேசினாலும் செயலில் நீங்க புயல் தான், வயசானாலும் கம்பீரின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் வியப்பு

Gautam Gambhir LLC
- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகளில் உலகம் முழுவதிலும் உள்ள பல நட்சத்திர முன்னாள் வீரர்கள் இத்தொடரில் விளையாடி வருகிறார்கள். அதில் மார்ச் 14ஆம் தேதியன்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணியை இந்திய மகாராஜாஸ் அணி எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகாராஜாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆசிய அணிக்கு 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தில்சான் 32 (27) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அடுத்து வந்த முகமது ஹபீஸ் 2, மிஸ்பா-உல்-ஹக் 0, அஸ்கர் ஆப்கன் 15 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட உபுல் தரங்கா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 69 (48) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அப்துல் ரசாக் 27* (17) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் ஆசிய லயன்ஸ் 157/5 ரன்கள் எடுக்க இந்திய மகாராஜாஸ் சார்பில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 2 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

செயல் நாயகன்:
அதைத் தொடர்ந்து 158 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே பொறுப்புடன் செயல்பட்ட ராபின் உத்தப்பா – கௌதம் கம்பீர் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக அதில் ராபின் உத்தப்பா சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக அரை சதம் கடந்த நிலையில் அவருக்கு ஈடு கொடுத்த கேப்டன் கௌதம் கம்பீர் 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார். நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நன்கு செட்டிலாகி எதிரணி பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 12.3 ஓவரிலேயே 159 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்று கொடுத்தது.

அதில் ராபின் உத்தப்பா 11 பவுண்டரி 5 சிக்சருடன் 88* (39) ரன்களும் கௌதம் கம்பீர் 12 பவுண்டரிகளுடன் 61* (36) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். இதனால் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்திய மஹாராஜாஸ் அணி இந்த வாழ்வா – சாவா போட்டியில் வென்றுள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதியன்று உலக அணிக்கு எதிராக நடைபெறும் கடைசியில் போட்டியில் வெல்லும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கலாம்.

- Advertisement -

இதை பார்க்கும் ரசிகர்களுக்கு கடந்த 2014 ஐபிஎல் தொடரில் இதே போல சிறப்பாக செயல்பட்டு ராபின் உத்தப்பா ஆரஞ்சு தொப்பியை வென்று கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா 2வது கோப்பையை வென்றது நினைவுக்கு வருகிறது என்றே சொல்லலாம். அதை விட இத்தொடரில் இந்திய மஹாராஜாஸ் அணிக்காக நிறைய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே தடுமாறும் நிலையில் கேப்டனாக முன்னின்று சிறப்பாக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் 54 (39), 68 (42), 61* (32) என 3 போட்டிகளிலும் தொடர்ந்து ஹாட்ரிக் அரை சதங்களை அடித்து 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 183 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

முன்னதாக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு இதே போல பெரிய ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் ஓய்வுக்கு பின் அரசியலில் ஈடுபட்டு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் விராட் கோலி போன்றவர்களை சிறப்பாக செயல்பட்டும் தாறுமாறாக விமர்சிப்பதையும் சுமாராக செயல்படும் கேஎல் ராகுலுக்கு ஆதரவாக பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs AUS : காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாட இவருக்கே அதிக வாய்ப்பு – விவரம் இதோ

அப்படி வாயில் தாறுமாறாக பேசினாலும் செயலில் வயசானாலும் ஸ்டைல் மாறாமல் இத்தொடரில் அபாரமாக செயல்படும் அவரை “செயல் புயல்” என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். மேலும் இங்கே அசத்தும் நீங்கள் பேசாமல் ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணியில் ராகுலுக்கு பதிலாக தொடக்க வீரராக விளையாடுமாறும் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement