IND vs AUS : காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாட இவருக்கே அதிக வாய்ப்பு – விவரம் இதோ

Shreyas-iyer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்ததால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் துவங்கி நடைபெற்ற இந்த கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடும்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை பேட்டிங் செய்ய களமிறங்கவே இல்லை.

Shreyas-Iyer

- Advertisement -

அவர் முதுகு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்ததாக அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட அணியின் அணி நிர்வாகம் அவர் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் எஞ்சிய நாட்களில் விளையாட மாட்டார் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடுவதோடு ஐபிஎல் தொடரின் பெரும்பகுதியையோ அல்லது முழு ஐபிஎல் தொடரையோ தவறவிடவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக அவர் நாளை மறுதினம் மார்ச் 17-ஆம் தேதி துவங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shubman Gill and SKY

இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான டீமில் நான்காவது வீரராக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அந்த இடத்தில் களமிறக்க போகும் வீரர் யார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அதற்கு பதிலாக தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் நான்காவது இடத்தை சூரியகுமார் யாதவைக் கொண்டு நிரப்ப உள்ளதாக அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி வருவதால் அவரே ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நான்காவது இடத்தில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஜெயிக்க அவர் தான் விக்கெட் கீப்பரா விளையாடனும் – ரோஹித்துக்கு கவாஸ்கர் ஆலோசனை

இதுவரை ஷ்ரேயாஸ் ஐயருக்கான மாற்று வீரர் இந்திய அணியில் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அப்படி மாற்றுவீரராக ஒருவர் அறிவிக்கப்பட்டால் அது சஞ்சு சாம்சனாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement