2019 வலி ரிப்பீட்டு, வெற்றியை பறித்த ரன் அவுட் – சேவாக் முதல் ரசிகர்கள் வரை மொத்த இந்தியாவின் ஆதங்க ரியாக்சங்கள்

Virender Sehwag Womens
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அத்தொடரில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா எவ்வளவோ போராடியும் மீண்டும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

கடந்த 2020 டி20 உலக கோப்பை ஃபைனல், 2022 காமன்வெல்த் ஃபைனல் உட்பட வரலாற்றில் பலமுறை ஆஸ்திரேலியாவிடம் சரமாரியாக அடி வாங்கிய இந்திய மகளிரணி இம்முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக பீல்டிங் செய்து டெத் ஓவர்களில் சொதப்பிய இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவரில் 172/4 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சேவாக் ஆதங்கம்:
அதிகபட்சமாக பெத் மூனி 54 (37) ரன்களும் கேப்டன் மெக் லென்னிங் 49* (34) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா 9, மந்தனா 2, யாஸ்டிகா பாட்டியா 4 என டாப் ஆர்டர் வீராங்கனைகள் 50 ரன்கள் கூட எடுக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது.

அதனால் 28/3 என சரிந்த இந்தியாவை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய நம்பிக்கை நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிகஸ் 43 (24) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ஹர்மன்ப்ரித் அரை சதம் கடந்ததால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி 32 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய ரசிகர்கள் தெம்புடன் இருந்தனர். இருப்பினும் 14வது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்த அவர் 2 ரன்கள் எடுக்க ஓடினார்.

- Advertisement -

அப்போது இடையே லேசான சுணக்கத்தை சந்தித்த அவர் பந்து மெதுவாக வருவதாக நினைத்து வெள்ளை கோட்டை தொடும்போது சற்று அஜாக்கிரதையாக செயல்பட்டார். அதை பயன்படுத்திய கச்சிதமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அவரை ரன் அவுட் செய்தது. அதை தொடர்ந்து ரிப்ளையில் பார்க்கும் போது துரதிஷ்டவசமாக பேட்டை வேகமாக தரையில் வைத்ததால் நழுவி செல்ல விடாமல் மண் லேசாக தடுத்தது.

அப்போது அவர் வெள்ளை கோட்டுக்கு உள்ளே சென்றாலும் பேட் அல்லது அவருடைய உடல் பாகங்கள் உள்ளே செல்லாத காரணத்தால் நடுவர் அவுட்டென அறிவித்தார். அதனால் 52 (34) ரன்களில் அவுட்டான அவருக்கு ரன்களில் வழக்கம் போல சொதப்பிய இந்தியா 20 ஓவரில் 167/8 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்று உலகக்கோப்பை கனவை மீண்டும் நிஜமாக்க தவறியது.

- Advertisement -

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இதே போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியில் சிக்கிய இந்தியாவை ஜடேஜாவுடன் இணைந்து காப்பாற்ற போராடிய நம்பிக்கை நட்சத்திரம் தோனி கடைசி நேரத்தில் மார்ட்டின் கப்டில் வேகத்தில் துரதிஷ்டவசமாக ஒரு இன்ச் இடைவெளியில் ரன் அவுட்டானார்.

இறுதியில் இதே போலவே இந்தியா தோற்றது ஃபெவிலியனில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவின் கண்களை கலங்க வைத்து ரசிகர்களின் நெஞ்சை உடைத்தது. அதே போல இப்போட்டியில் அதே 7வது நம்பர் ஜெர்சியி கொண்ட ஹர்மன்ப்ரீத் அவுட்டானது ஸ்ம்ரிதி மந்தனா போன்ற வீராங்கனைகளையும் ஒட்டுமொத்த இந்தியாவின் நெஞ்சத்தை உடைத்துள்ளது.
IPL 2023 : இந்தமுறை சி.எஸ்.கே அணிக்கு என்னோட பங்களிப்பு இந்த 2 விஷயத்திலுமே இருக்கும் – தீபக் சாஹர் சபதம்
இதையும் படிங்க:

குறிப்பாக “களத்தில் மேட்ச் வின்னர் இருந்தும் செமி பைனலில் ரன் அவுட்டால் தோல்வியடைந்து நெஞ்சமுடைவதை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்தியா அவுட்டானதை பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நாம் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் ஆஸ்திரேலியா ஏன் தோற்கடிப்பதற்கு மிகவும் கடினமான அணி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டனர். சிறப்பாக முயற்சித்தீர்கள் பெண்களே” என்று முன்னாள் வீரர்கள் சேவாக் தோனி அவுட்டான புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement