IPL 2023 : இந்தமுறை சி.எஸ்.கே அணிக்கு என்னோட பங்களிப்பு இந்த 2 விஷயத்திலுமே இருக்கும் – தீபக் சாஹர் சபதம்

Deepak-Chahar
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட்டார். அதோடு தொடர்ச்சியாக காயம் குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடர் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற டி20 உலக கோப்பை என முக்கியமான தொடரகளை தவறவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

Deepak

தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது சிகிச்சை மற்றும் பயிற்சியினை மேற்கொண்டு வரும் தீபக் சாஹர் ஐபிஎல் தொடருக்காக முழு வேகத்தில் தயாராகி வருகிறார். மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் களமிறங்குவார் என்று தெரிகிறது. மேலும் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை மார்ச் 3-ஆம் தேதி சென்னையில் துவங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த பயிற்சியில் தோனி, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் தீபக் சாகர் இணைந்து பயிற்சியில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. 30 வயதான தீபக் சாகர் கடந்த மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்தார். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி அவரை 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரில் அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது.

deepak 1

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ஆண்டு கம்பேக் கொடுக்க காத்திருக்கும் தீபக் சாகர் தனது பங்களிப்பு குறித்து பேசுகையில் கூறியதாவது : நான் மீண்டும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். அதுமட்டும் இன்றி பந்தை என்னால் இருபுறமும் ஸ்விங் செய்து வீச முடியும். இதன் காரணமாக நிச்சயம் நான் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் தொல்லைகளை அளிப்பேன்.

- Advertisement -

அதோடு தற்போது என்னுடைய பேட்டிங்கிலும் அதிகளவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் நான் பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். அதற்காகவே பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று தீபக் சாகர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே காம்பெடிஷன் அதிகமாக இருக்கும். எனவே நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகல் – காரணம் என்ன தெரியுமா?

அந்த வகையில் தற்போது பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே கவனம் செலுத்தி வருவதாகவும், நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே என்னுடைய பங்களிப்பு சிஎஸ்கே அணிக்காக இருக்கும் என்றும் தீபக் சாஹர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement