IND vs WI : பணத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்க, இந்தியாவை கலாய்த்த ஆஸி ஊடகம் – ரசிகர்களும் கோபம், நடந்தது என்ன?

Team India
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 3வது நாள் முடிவில் 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலேயே வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக ஜூலை 12ஆம் தேதி துவங்கிய டாமினிகா நகரில் துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சுமாராக செயல்பட்டு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சாதனை படைத்த கேப்டன் ரோகித் சர்மா சதமடித்த 103 ரன்களும் அறிமுகப் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து வரும் ஜெய்ஸ்வால் சதமடித்து 143* ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் விராட் கோலி 36* ரன்கள் எடுத்துள்ளதால் இந்த போட்டியில் இந்தியா எளிதாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1980களில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே பணம் இல்லாமல் தவித்த பிசிசிஐ’க்கு உலக அளவில் பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி நிதியுதவி செய்த காலங்கள் இருந்தன.

- Advertisement -

கலாய்த்த ஆஸி ஊடகம்:
இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல வெற்றிகளைப் போலவே பொருளாதார அடிப்படையிலும் முன்னேறிய பிசிசிஐ 21ஆம் நூற்றாண்டில் ஐபிஎல் டி20 தொடரை நடத்தி ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து சர்வதேச கிரிக்கெட்டை நடத்தும் ஐசிசியை விட பணக்கார வாரியமாக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். ஆனாலும் இந்திய மைதானங்களில் மழை பெய்தால் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நவீன வசதிகள் இல்லாமல் இருப்பது வருணபகவான் தலை காட்டும் போதெல்லாம் இந்தியாவின் மானம் உலக அரங்கில் கப்பலேற்றி வருவது வேறு கதை.

அதே போல தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கு பல தனியார் நிறுவனங்கள் போட்டி போடுவது வழக்கமாகும். அந்த வகையில் இதுவரை இருந்து வந்த பைஜுஸ் சமீபத்தில் விலகிய நிலையில் புதிய ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் தற்போது ஒப்பந்தமாகியுள்ளது. ஒரு போட்டியின் முடிவு பற்றி கணிப்பதை மையப்படுத்தி பணம் கட்டி விளையாடும் அந்த விளையாட்டு செயலி கிரிக்கெட் ரசிகர்களுடைய மிகவும் புகழ்பெற்றதுடன் அவர்களுடைய பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் கறக்கும் ஒன்றாக இருந்து வருவதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

இங்கு விஷயம் என்னவெனில் சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம் இந்தியாவின் கிட் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்து கொண்டது அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அந்த நிறுவனம் தயாரித்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஜெர்ஸி அனைவரது வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. குறிப்பாக அது ஐசிசி தொடர் என்பதால் மார்பு பகுதியில் இந்தியா என்று ஜெர்சியில் எழுதப்பட்டிருந்தது இன்னும் அதனுடைய மதிப்பையும் கௌரவத்தையும் அதிகப்படுத்தியது.

ஆனால் தற்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் சாதாரண இருதரப்பு தொடரில் இந்தியா என்னும் இடத்திற்கு பதிலாக ட்ரீம் லெவன் என்று எழுதப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேசத்தை பிரதிபலிக்கும் அணியில் நாட்டின் பெயர் சுத்தமாக இல்லாமல் ஒரு பெட்டிங் நிறுவனத்தின் பெயர் பெரிய எழுத்துக்களில் இருக்கும் அளவுக்கு பிசிசிஐ பணத்தாசை இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ கூட அடிக்க தெம்பில்லன்னு கலாய்ப்பிங்க, விராட் – ரோஹித்தை கலாய்கும் ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் பதிலடி

அதனால் தற்போதைய இந்திய அணியின் ஜெர்ஸி மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கும் ரசிகர்கள் பணத்திற்காக பிசிசிஐ எது வேண்டுமானாலும் செய்யும் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அதன் உச்சகட்டமாக இதை கவனித்த பாக்ஃஸ் ஆஸ்திரேலிய ஊடகம் இது என்ன பாரம்பரமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டா? அல்லது வேறு எதுவுமா என்று ட்விட்டரில் கலாய்த்துள்ளது.

Advertisement