IND vs WI : வெஸ்ட் இண்டீஸ கூட அடிக்க தெம்பில்லன்னு கலாய்ப்பிங்க, விராட் – ரோஹித்தை கலாய்கும் ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் பதிலடி

IND vs WI Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. முன்னதாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடர்களில் அசத்துவதும் ஐசிசி தொடர்களில் 10 வருடங்களாக முக்கிய போட்டிகளில் தோற்பதை வழக்கமாக வைத்துள்ளது. அது போக நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர வீரர்கள் அழுத்தமான முக்கிய போட்டிகளில் சொதப்பி இந்தியாவை தலை குனிய வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

IND vs WI 1

- Advertisement -

அதில் லேட்டஸ்டாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பி 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சூப்பர் ஹீரோக்கள் என்று ரசிகர்கள் கொண்டாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

தெம்பில்லைன்னு கலாய்ப்பிங்க:
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் நீங்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டுமே அசத்துவீர்கள் நாட்டுக்காக சொதப்புவீர்கள் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறிய பலவீனமான கத்துக்குட்டி வெஸ்ட் இண்டீஸை அடிக்க விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் 2 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா எளிதாக சாதனை படைக்கும் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அந்த நிலைமையில் டாமினிக்கா நகரில் துவங்கி நடைபெற்று வரும் முதல் போட்டியில் எதிர்பார்த்தது போலவே வெஸ்ட் இண்டீஸை 150 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா தற்போது 312/2 ரன்களுடன் ஆரம்பத்திலேயே வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Virat Kohli Rohit Sharma

அதை விட ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் சதமடித்ததை பாராட்டினாலும் 103 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவையும் 36* ரன்கள் எடுத்த விராட் கோலியையும் “அப்படியே உலகின் நம்பர் ஒன் அணிக்கு எதிராக ஃபைனலில் அடித்து தள்ளிவிட்டார்கள்” என்று இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி மற்றும் வீரர்களை கிண்டலடிப்பவர்கள் ஒருவேளை சிறப்பாக செயல்படாமல் போனால் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை கூட அடிப்பதற்கு தெம்பற்றவர்கள் என்று கலாய்ப்பார்கள் என முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடர் மிகவும் கடினமானது. ஏனெனில் இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகளில் பலவீனமான எதிரணிக்கு எதிராக ரன்கள் அடித்தார்கள் என்று அனைவரும் பேசுவார்கள். ஒருவேளை கடவுள் தடை செய்து ரன்கள் அடிக்காமல் போனால் “ஓ உங்களால் இங்கே கூட ரன்கள் அடிக்க முடியாதா? அப்படியானால் வேறு எங்கு தான் அடிப்பீர்கள்” என்று அனைவரும் கிண்டலடிப்பார்கள்”

“எனவே அதை மனதில் வைத்து ரோகித் மற்றும் விராட் போன்றவர்களுக்கு வெற்றிகரமாக செயல்படுவது மிகவும் கடினமாகும் மேலும் ரோகித் சர்மா சொந்த மண்ணுக்கு வெளியே குறிப்பாக தொடக்க வீரராக விளையாடிய துவங்கியது முதல் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அத்துடன் தொடக்க வீரராக அவருடைய சாதனைகள் அபாரமாக இருக்கிறது. எனவே அவருடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் திட்டங்கள் ராக்கெட் அறிவியல் கிடையாது”

இதையும் படிங்க:IND vs WI : இத்தனை ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இப்படி ஒரு சாதனையை செய்வது – இதுவே முதல் முறையாம் (2ஆம் நாளில் நடந்த அதிசயம்)

“பொதுவான திட்டத்தை பயன்படுத்தி அவர் விளையாடி வருகிறார். சொல்லப்போனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கடினமான சூழ்நிலைகளையும் இதே திட்டத்தை பயன்படுத்தி அவர் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல இதே போட்டியில் தரமான விராட் கோலி முதல் 85 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தரமாகவே இருக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement