எனக்கு விராட் கோலி பத்தி நல்லா தெரியும். அவரு அந்த சேன்ஸ்ஸ் மிஸ் பண்ண மாட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf-and-Kohli
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெறுவார்களா? என்ற விவாதமே பலரது மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

அதனை தொடர்ந்து தற்போது அனைவரது பார்வையும் அடுத்ததாக டி20 உலக கோப்பை பக்கம் திரும்பி உள்ளது. அதே வேளையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வினை வழங்கி தொடர்ச்சியாக இளம் வீரர்களை கொண்டே டி20 அணிகளையே அறிவித்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் ஹார்டிக் பாண்டியா தலைமையிலோ அல்லது சூரியகுமார் யாதவ் தலைமையிலோ இளம் வீரர்களை கொண்ட அணியே டி20 உலக கோப்பையில் விளையாடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் சமீபத்தில் பிசிசிஐ நடத்திய மீட்டிங் ஒன்றில் ரோகித் சர்மா தான் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று முடிவு செய்துள்ளதால் ரோஹித் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவது உறுதி ஆகிவிட்டது.

- Advertisement -

அதே வேளையில் விராட் கோலி இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் அவரது இடத்தில் இஷான் கிஷன் தான் விளையாடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருவதால் டி20 அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் :

இதையும் படிங்க : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

விராட் கோலியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரும் ரோகித்தும் மிகச் சிறப்பான வீரர்கள் அவர்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையிலேயே இருக்கிறார்கள். அதனால் விராத் கோலி நிச்சயம் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று நம்புவதாக டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement