IPL 2023 : அவர எதிர்த்து விளையாடுவது கஷ்டம், ஒன்னா ஒரே டீமில் இருப்பதே ஈஸி – இந்திய நட்சத்திர வீரரை பாராட்டிய டு பிளேஸிஸ்

Faf
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் 12 போட்டிகளில் தலா 6 வெற்றி தோல்விகளை பதிவு செய்துள்ளது. முன்னதாக 2008 முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற வரலாறு படைத்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து 2013 முதல் கேப்டனாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முழு மூச்சுடன் போராடிய விராட் கோலி கோப்பையை வெல்லத்தவறியதால் கடந்த வருடம் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு சென்று தோற்ற பெங்களூரு இம்முறை கோப்பையை வெல்ல போராடி வருகிறது.

RCB Faf Du Plessis

- Advertisement -

சென்னை அணியில் கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு 2018, 2021 வருடங்களில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் பெங்களூரு அணிக்காகவும் கடந்த வருடம் 468 ரன்களை எடுத்த நிலையில் இந்த வருடம் 631* ரன்கள் குவித்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் இவரை தவற விட்டு விட்டோமே என்று சென்னை ரசிகர்கள் வருந்தும் அளவுக்கு அசத்தும் அவர் கடந்த காலங்களில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு எதிராகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

ஒன்றாக இருப்பதே பெஸ்ட்:
இந்நிலையில் கடந்த காலங்களில் சென்னை அணியில் இருந்து விராட் கோலிக்கு எதிராக விளையாடியதை விட தற்போது அவரை கேப்டன்ஷிப் செய்து ஒரே அணியில் விளையாடுவது சிறப்பாக உள்ளதாக டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக 11வது பேட்ஸ்மேன் அவுட்டானால் கூட அதை வெறித்தனமாக கொண்டாடி கிரிக்கெட்டை ஆக்ரோசத்துடன் முழு மூச்சுடன் விளையாடும் விராட் கோலி போன்றவருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Virat Kohli Du Plessis RCB vs GT

“விராட் கோலியிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் கிரிக்கெட்டின் மீதிருக்கும் அவருடைய ஆர்வமாகும். அந்த வகையில் அவருக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் ரசித்துள்ளேன். அதிலும் ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் அவர் காட்டும் ஆக்ரோஷம் 10க்கு 10 மதிப்பெண்ணாக இருக்கும். குறிப்பாக 11வது பேட்ஸ்மேன் அவுட்டானால் கூட அதை வெறித்தனமாக கொண்டாடும் அவருடைய ஆர்வம் எனக்கு எப்போதுமே ஆச்சரியமாகும். அந்த வகையில் இவ்வளவு ஆர்வத்துடன் அவர் இந்த விளையாட்டில் விளையாடுவதை பார்த்து நான் எப்போதும் ஆச்சரியமடைகிறேன்”

- Advertisement -

“தற்போது ஒரே அணியில் இருப்பதால் அவருக்கு எதிராக விளையாடுவதை விட ஒன்றாக ஒரே அணியில் விளையாடுவதே சிறந்தது என்று நான் சொல்வேன். ஏனெனில் அவருடன் நீங்கள் இணைந்து விளையாடும் போது அவருடைய ஆர்வம் உங்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது சிறப்பான ஒன்றாகும். அத்துடன் அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது உண்மையாகவே மகிழ்ச்சியான தருணத்தை கொடுக்கும். அதனால் உங்களுடைய சிறந்தவற்றை வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் உங்களிடம் ஏற்படும்”

Faf

“அந்த வகையில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பின்னால் இருக்கும் வீரரையும் வீரருக்கு பின்னால் இருக்கும் நபரையும் அறிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலி எப்போதும் தாராள மனப்பான்மை கொண்ட மனிதர். என்னையும் அவர் தனது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதால் நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். தற்போது நாங்கள் ஒரே மாதிரியான ஆர்வம் மற்றும் பச்சை குத்தல்களை பகிர்ந்து கொள்கிறோம்” என்று கூறினார். அதாவது விராட் கோலி போன்ற விளையாட்டின் மீது உண்மையான ஆர்வம் மற்றும் ஆக்ரோஷம் இருக்கும் வீரருடன் இணைந்து செயல்படுவது தம்மைப் போன்ற இதர வீரர்களுக்கும் பெரிய உத்வேகத்தை கொடுப்பதாக டு பிளேஸிஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : மும்பை, சென்னையை விட குழந்தைகள் முதல் பெரியவங்க வரை ரசிகரா இருக்கும் அந்த டீம்’க்கு என்னோட சப்போர்ட் – பிரட் லீ

அந்த வகையில் தமது நண்பராக மாறியுள்ள விராட் கோலியுடன் இணைந்து இந்த சீசனில் அவர் 2 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஹைதராபாத்துக்கு எதிரான தங்களுடைய 13வது போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் பெங்களூரு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement