IPL 2023 : மும்பை, சென்னையை விட குழந்தைகள் முதல் பெரியவங்க வரை ரசிகரா இருக்கும் அந்த டீம்’க்கு என்னோட சப்போர்ட் – பிரட் லீ

Lee
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் 12 போட்டிகளில் தலா 6 வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதனால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 5 கோப்பைகளை வென்ற மும்பை மற்றும் 4 கோப்பைகளை வென்ற சென்னை ஆகிய அணிகள் ஐபிஎல் வரலாற்றின் பரம எதிரிகளாகவும் அதிக ரசிகர்களை கொண்ட வெற்றிகமான அணிகளாகவும் போற்றப்படுகின்றன.

cskvsrcb

- Advertisement -

ஆனால் கடந்த 15 வருடங்களாக கோப்பையை தொடாமலேயே மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு நிகராக ரசிக பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது பெங்களூரு என்றே சொல்லலாம். கடந்த 2008இல் தோற்றுவிக்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் பெரும்பாலும் லீக் சுற்றில் அபாரமாக செயல்படும் அந்த அணி ஃபைனல், பிளே ஆஃப் போன்ற நாக் அவுட் போட்டிகளில் ஏதோ ஒரு தருணத்தில் சொதப்பலாக செயல்பட்டு வெற்றியை எதிரணிக்கு தாரை வார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

பிடித்த அணி:
அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு மட்டும் கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்களும் கிண்டல்களும் கடந்த 15 வருடங்களாக தொடர்கின்றது. அதிலும் குறிப்பாக 49க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ள அந்த அணியை இப்போதும் உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஏதேனும் ஒரு அணி 100 ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட்டானால் சமூகவலைகளில் ட்ரெண்டாகும் அளவுக்கு எதிரணி ரசிகர்கள் கலாய்த்து தள்ளி விடுவார்கள்.

RR vs RCB 2

ஆனாலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர், அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் 2 ஜோடி, அதிக ரன்கள் குவித்த வீரரை கொண்ட அணி போன்ற பல நிறைய வரலாற்று சாதனைகளை படைத்துள்ள பெங்களூருவுக்கு விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திரங்கள் விளையாடியதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மும்பை மற்றும் சென்னையை போல் அதிக கோப்பைகளை வெல்ல விட்டாலும் குழந்தைகளுக்கு பிடித்த அணியாகவும் அனைவரிடமும் உத்வேகத்தை ஏற்படுத்தும் அணியாகவும் இருக்கும் பெங்களூரு தமக்கு மிகவும் பிடித்த அணி என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு குழந்தையும் பார்த்து அதில் ஒரு அங்கமாக இருக்கும் அணியாக ஆர்சிபி திகழ்கிறது. அவர்கள் களத்தில் கடினமாக விளையாடுகிறார்கள். குறிப்பாக அவர்கள் எதிரணிகளுக்கு மிகவும் கடினத்தை கொடுக்கும் அளவுக்கு களத்தில் விளையாடுகிறார்கள் என்று நான் சொல்வேன். அதே போல அந்த அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் உட்பட அனைவரும் களத்திற்கு வெளியே மிகவும் ஜாலியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் அந்த அணியின் ஜெர்சியில் இருக்கும் சிவப்பு நிறம் எனக்கு பிடித்துள்ளது”

Lee

“அத்துடன் எப்போதுமே நான் அந்த அணியின் லோகோவில் இருக்கும் தங்க நிறத்தை விரும்புபவன். எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நானும் கச்சிதமாக பொருந்தக்கூடியவனாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். பொதுவாக முக்கிய போட்டிகளில் தோற்றாலும் மிகவும் கடினமாக போராடும் பெங்களூரு ரசிகர்களின் மனதை வென்று வரும் அணியாக இருக்கிறது. அதே போல் போட்டி முடிந்ததும் களத்திற்கு வெளியே ஆட்டம் பாட்டம் என வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்கும் அணியாக பெங்களூரு நிர்வாகம் இருக்கிறது.

இதையும் படிங்க:IPL 2023 : என்னோட ஃபார்ம் பறிபோக காரணமே நீங்க தான், எனக்கு வேற வேலையும் தெரியாது – கேஎல் ராகுல் ஆதங்கம்

அந்த வகையில் இதர அணிகளை காட்டிலும் பெங்களூரு தமக்கு பிடித்த அணியாக இருப்பதால் அதில் தாமும் விளையாடுவதற்கு பொருத்தமாக இருப்பேன் என்று பிரெட் லீ கூறியுள்ளார். இந்த நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் பெங்களூரு களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement