IPL 2023 : என்னோட ஃபார்ம் பறிபோக காரணமே நீங்க தான், எனக்கு வேற வேலையும் தெரியாது – கேஎல் ராகுல் ஆதங்கம்

KL Rahul
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சுமாராகவே செயல்பட்டார். அதே போல ஐபிஎல் தொடரிலும் ஆரம்ப காலங்களில் பெங்களூரு போன்ற அணிகளில் சுமாராகவே செயல்பட்ட அவர் 2018இல் பஞ்சாப் அணியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்து 2019இல் காயமடைந்த சிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். அத்துடன் இளம் வீரராக இருந்ததால் அடுத்த தலைமுறை கேப்டனாக பிசிசிஐ வளர்க்க நினைத்த அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது.

Rahul-Dravid-and-KL-Rahul

- Advertisement -

ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடிய அவர் முக்கிய நேரத்தில் அவுட்டாகி அணியின் தோல்விகளுக்கு காரணமாகும் வகையில் செயல்படுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தனர். அதற்கேற்றார் போல் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகும் வகையில் அமைந்த அவருக்கு எதிராக எழுந்த உச்சகட்ட விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ ஓப்பனிங் இடத்தையும் துணை கேப்டன்ஷிப் பதவியும் பறித்தது.

நீங்க தான் காரணம்:
மேலும் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய அவரை வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் புள்ளி விவரங்களுடன் விமர்சித்ததால் டெஸ்ட் அணியிலும் வாய்ப்பை இழந்தார். அதனால் அவை அனைத்திற்கும் 2023 ஐபிஎல் தொடரில் பதிலடி கொடுத்து இழந்த ஃபார்மை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கொஞ்சமும் மாறாமல் தடவலாகவே செயல்பட்டு குஜராத்துக்கு எதிரான கையில் வைத்திருந்த வெற்றி பறிபோகும் அளவுக்கு சொதப்பி இறுதியில் காயமடைந்து வெளியேறினார்.

KL rahul LSG

அப்போது அந்த காயத்தால் இந்தியா மற்றும் லக்னோ அணியை விட எதிரணிக்கு தான் பின்னடைவு என்று கலாய்த்த ரசிகர்கள் தொடர்ந்து அவரை தடவல் மன்னன் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே தடுமாறும் தம்மை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலாய்த்தது மனதளவில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி ஃபார்ம் பறிபோவதற்கு மறைமுக காரணமாக அமைந்ததாக கேஎல் ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது (கிண்டல்கள்) சில நேரங்களில் மற்ற வீரர்களைப் போலவே என்னையும் அதிகமாக பாதித்தது. குறிப்பாக மோசமான தருணத்தில் ஒரு விளையாட்டு வீரருக்கு ஆதரவு தேவைப்படும் போது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அந்த விளையாட்டு வீரர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை பற்றி நினைக்காமல் பேசுகின்றனர். பொதுவாக விளையாட்டில் யாருமே மோசமாக செயல்பட விரும்ப மாட்டார்கள். அது தான் எங்களுடைய வாழ்க்கை. குறிப்பாக கிரிக்கெட்டை தவிர்த்து எனக்கு வேறு எதுவும் தெரியாது. அது மட்டுமே என்னால் செய்ய முடியும்”

KL Rahul

“இந்த விளையாட்டில் நான் ஆர்வத்துடன் இல்லை அல்லது போதுமான அளவு கடினமாக உழைக்கவில்லை என்று ஏன் அவர்கள் கருதுகின்றனர்? துரதிஷ்டவசமாக விளையாட்டில் அதற்கான எந்த சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல் நானும் உங்களை போலவே கடினமாக உழைக்கிறேன். ஆனால் உழைப்புக்கான பலன் எனது வழியில் வரவில்லை” என்று கூறினார். அதாவது மோசமான தருணத்தில் ஆதரவு கொடுக்காமல் கலாய்க்கும் ரசிகர்கள் தாம் கடினமாக உழைத்தும் அதிர்ஷ்டமின்மையால் பலன் கிடைக்கவில்லை என்பதை உணர்வதில்லை என ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : இந்திய அணியில் உங்கள கழற்றி விட்டதில் தப்பே இல்ல – மோசமான சாதனை படைத்த தவான், ரசிகர்கள் அதிருப்தி

இருப்பினும் யாருமே ராகுல் இந்திய அணியை அல்லது இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விமர்சிக்கவில்லை. மாறாக சிறப்பாக செயல்படுவார் என காத்திருந்து காத்திருந்து எல்லை மிஞ்சிய காரணத்தாலேயே இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக விமர்சனங்களை முன் வைத்தனர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இழந்த ஃபார்மை மீட்டு வாருங்கள் என்பதே அனைவரது ஆலோசனையாகவும் அக்கறையாகவும் இருந்து வருகிறது. ஆனால் அதை செய்யாத ராகுல் ரசிகர்கள் மீது சலித்துக் கொள்வது நியாயமற்றது என்றே சொல்லலாம்.

Advertisement