காதலி ஏமாத்திட்டு போனா எப்படி இருக்கும்.. நானும் அதை பாத்துருக்கேன்.. 2023 உ.கோ தோல்வி பற்றி டு பிளேஸிஸ்

Faf Du Plessis
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்த ஆஸ்திரேலியா அதன் பின் சிறப்பாக விளையாடி 6வது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த அந்த அணி உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் லீக் மற்றும் செமி ஃபைனலில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா 2011 போல சொந்த மண்ணில் நிச்சயமாக கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா வெறும் 240 மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

காதலி ஏமாத்துன மாதிரி:
அந்த தோல்வியால் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் கோப்பையை வெல்ல முடியாத விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் களத்திலேயே கண்கலங்கி நின்றனர். இந்நிலையில் நீண்ட நாள் காதலித்த காதலி திடீரென்று கைவிட்டால் என்ன உணர்வு வருமா அதே போன்ற உணர்வை உலகக் கோப்பை தோல்வியால் இந்திய வீரர்கள் சந்தித்திருப்பார்கள் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார்.

2015 உலகக் கோப்பையில் இதே போன்ற சூழ்நிலைகளை தாமும் எதிர்கொண்டதாக தெரிவிக்கும் அவர் இதிலிருந்து வெளிவருவதற்கு சற்று காலம் தேவைப்படும் என்று சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அதிலிருந்து வெளி வருவது மிகப்பெரிய சவாலாகும். 2015 உலகக் கோப்பையில் நானும் இதே போன்ற வீழ்ச்சியை ஒரு கிரிக்கெட்டராக சந்தித்தது இன்னும் நினைவிருக்கிறது”

- Advertisement -

“தோல்வியால் கிடைத்த இதய வலியில் இருந்து வெளிவர சிறிது நேரம் எடுக்கும். அது காதலியுடன் பிரிந்து செல்வது போன்ற உணர்வை கொடுக்கும் என்பதால் உடனடியாக வெளிவர முடியாது. இந்த உலகக்கோப்பையில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடியது. அதனால் கண்டிப்பாக அவர்கள் அதே போன்ற உணர்வையும் இதயம் உடைந்த சூழ்நிலையையும் சந்தித்திருப்பார்கள். அது அவர்கள் வெல்ல வேண்டிய உலகக் கோப்பை”

இதையும் படிங்க: அவர மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் பவுலரை எந்த யாராலும் உருவாக்க முடியாது.. இந்திய கோச் பாராட்டு

“அந்த வலிகள் ஆறுவதற்கு சற்று காலங்கள் தேவைப்படும். இப்போதைக்கு அடுத்ததாக நடைபெறும் தென்னாபிரிக்க தொடரில் நீங்கள் இருப்பீர்கள். அதில் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement