அவர மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் பவுலரை யாராலும் உருவாக்க முடியாது.. இந்திய கோச் பாராட்டு

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு பறந்துள்ளது. அதில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக இந்தியா போராட உள்ளது.

பொதுவாகவே தென்னாப்பிரிக்க மண்ணில் வேகப்பந்து வீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இம்முறை இந்தியா வெற்றி காண்பதற்கு ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 24 விக்கெட்களை எடுத்த முகமது ஷமி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு இந்தியாவின் வெற்றிக்கு போராடி உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

ஆர்ட்டிஸ்ட் பவுலர்:
அதே போல பும்ராவும் காயத்திலிருந்து மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் தென்னாப்பிரிக்காவை சாய்க்க போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். மேலும் எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் அதற்கான காரணத்தை விளக்கி பேசியது பின்வருமாறு.

“ஷமியை போன்ற கலை தெரிந்த பவுலரை உருவாக்குவேன் என்று பயிற்சியாளர்கள் சொன்னால் அதை நான் பொய் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரு பவுலர் நிமிர்ந்த சீமில் பிட்ச் செய்ய முடிந்தால் பின்னர் அனைத்து பவுலர்களும் ஷமியாக இருப்பார்கள். அந்த திறமையை பல வருட கடினமான உழைப்பு மற்றும் முன்னேற்றத்தால் ஷமி பெற்றுள்ளார்”

- Advertisement -

“அதாவது ஒவ்வொரு பந்தின் சீம் பகுதியை நேராக வைத்து சரியான மணிக்கட்டு பொசிஷனுடன் இருபுறமும் நகர்த்தக்கூடிய அரிதான திறமையை அவர் கொண்டுள்ளார். அதே போல பும்ராவும் வித்தியாசமான ஆக்சனை வைத்து பந்தை வெளியே அல்லது நகர்த்தும் திறமையைக் கொண்டுள்ளார். இந்த கலையை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக்க முடியும்”

இதையும் படிங்க: அதுக்கு தேவையில்லைன்னு விட்ருக்கோம்.. ரோஹித், கோலி டி20 கேரியர் முடிந்ததா? கேள்விக்கு இந்திய கோச் பதில்

“இவர்களால் உலகக் கோப்பையில் இலங்கையை 50 ரன்களுக்கு அவுட்டாக்கி பின்னர் தென் ஆப்பிரிக்காவை 320 ரன்கள் கட்டுப்படுத்தும் போது 80 ரன்களுக்கு அவுட்டாக்கியது நம்ப முடியாத செயல்பாடுகளாகும். இந்த பவுலர்கள் பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் நாங்கள் எதிர்பாராத அளவுக்கு அவர்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்க ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement