அதுக்கு தேவையில்லைன்னு விட்ருக்கோம்.. ரோஹித், கோலி டி20 கேரியர் முடிந்ததா? கேள்விக்கு இந்திய கோச் பதில்

Paras Mhambrey.jpeg
- Advertisement -

தென்னாபிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்ற இந்திய அதன் பின் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. இத்தனைக்கும் கடந்த 15 வருடங்களில் ஐபிஎல் தொடரில் நிறைய தரமான வீரர்கள் கிடைத்தும் இந்தியாவால் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்து வருகிறது.

அந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். ஆனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -

கேரியர் முடிந்ததா:
அதற்கேற்றார் போல் 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடர் உட்பட கடந்த ஒரு வருடமாக விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. அதனால் அந்த 2 ஜாம்பவான் வீரர்களின் டி20 கேரியர் முடிந்ததா என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த வகையிலும் இருதரப்பு டி20 போட்டிகள் முக்கியமில்லை என்று அர்த்தமல்ல”

- Advertisement -

“அனைத்து வீரர்களிடம் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். ரோகித், விராட் போன்ற வீரர்கள் ஐபிஎல் அல்லது இந்தியா ஆகிய எந்த அணிக்காக இருந்தாலும் தங்களுடைய டி20 ஆட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் இருதரப்பு தொடர்களின் போது இளைய வீரர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்”

இதையும் படிங்க: 97/7 என சரிந்த நியூஸிலாந்து.. டெஸ்டில் டி20 இன்னிங்க்ஸ் விளையாடி காப்பாற்றிய கிளன் பிலிப்ஸ்

“குறிப்பாக போட்டியின் விழிப்புணர்வு, அழுத்த சூழ்நிலைகளில் அசத்துவது, இந்திய ஜெர்ஸியில் மாறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி அவர்கள் புரிந்து செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்” என்று கூறினார். அதாவது விராட் மற்றும் ரோஹித் தங்களின் திறமையை நிரூபித்தவர்கள் என்பதால் இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற கண்ணோட்டத்துடன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாக மாம்ப்ரே கூறியுள்ளார். மொத்தத்தில் அவரது கருத்தை வைத்து பார்க்கும் போது உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டியில் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிய வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement